பேரறிவாளனின் விடுப்பை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தனது தந்தை டி.ஞானசேகரன் என்ற குயில்தாசனுக்கு உடல் நலம் சரியில்லாததால் பரோலில் விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்நிலையில், பேரறிவாளனை ஒரு மாத விடுப்பில் செல்ல மாநில அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் முதன் முறையாக, கடந்த மாதம் ஒரு மாத விடுப்பில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து பரோலில் வெளிவந்த பேரறிவாளனை ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தினமும் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் சந்தித்து வந்தனர். இந்நிலையில் பேரறிவாளனின் விடுப்பு நாளையுடன் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து பேரறிவாளனுக்கு வழங்கிய விடுப்பை மேலும் ஒருமாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நக்கீஎரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக