திமுக கூட்டணி தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய
விஜயகாந்த், விரைவில் மாவட்டச் செயலாளர்களை சந்தித்து விவாதிக்க உள்ளதாக
கூறப் படுகிறது.
அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டோம் என்று தேமுதிக தொடர்ந்து கூறி
வந்தது. இதனால், அக்கட்சி திமுகவுடன் கூட்டணி சேரும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேமுதிக மகளிரணி பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா, திமுகவை
தில்லுமுல்லு கட்சி என்று கடுமையாக விமர்சித்து பேசினார். அதைத் தொடர்ந்து
தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்தார். தேமு திக
தலைமையை ஏற்பவர்கள் கூட் டணிக்கு வரலாம் என்று பிரேமலதா அழைப்பு
விடுத்தார்.இந்த ஆளு குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னா மாதிரி....தேர்தல் நடக்கிற அன்னைக்கு கூட மாத்தி மாத்தி பேசக்கூடிய ஆளு....முன்னுக்கு முரணாக பேசுறத யாரோ ராஜதந்திரம்னு சொல்லி குடுத்தாப்பல?
விஜயகாந்தின் தனித்துப் போட்டி அறிவிப்பால் அக்கட்சித் தொண் டர்கள்
அதிருப்தி அடைந்தனர். அவர் களை சமாதானப்படுத்தும் விதமாக, பலமான கூட்டணி
அமைப்பேன் என்று விஜயகாந்த் கூறியிருந்தார். திமுக, அதிமுகவுக்கு எதிராக
உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் அவர்
ஈடுபட்டார். ஆனால், அவரது முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.
இதற்கிடையே, தேமுதிக முக்கிய நிர்வாகிகளுடன் விஜயகாந்த் நேற்று முன்தினம்
ஆலோசனை நடத்தினார். அப்போது, திமுக கூட்டணியில் இணைவதே சிறந்தது என்று
நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, விவாதிக்கலாம் என
விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதன்படி, தேமு திக மாவட்டச் செயலாளர்கள்
கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்று தெரிகிறது. இதில் கூட்டணி குறித்த
இறுதியான முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என கட்சி நிர்வாகி ஒருவர்
தெரிவித்தார். ://tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக