விமான நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரில்
உடலுக்கு அருகில் கலாஷ்னிகோவ் துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜாவுண்டெம் விமான நிலையத்தில் முதல் தாக்குதல் இடம்பெற்றது
இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பெல்ஜியத்தின் சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
விமான நிலையத்தில் 81 பேரும், ரயில் நிலையத்தில் 55 பேரும் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரஸல்ஸ் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர் என பெல்ஜியப் பிரதமர் ஷார்ல் மிஷேல் கூறுகிறார்.
எது நடைபெறும் என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்தோமோ அது நடைபெற்றுவிட்டது எனக் கூறியுள்ள அவர், மிகவும் துக்ககரமான ஒரு நேரத்தை நாடு எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். பெல்ஜியத் தலைநகர் பிரச்ஸ்லில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளதாக பிரசல்ஸிலுள்ள பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். பெல்ஜியம் பெரும் சவால்களை எதிர்கொள்கிறது என பிரதமர் மிஷேல் கூறுகிறார். பல இடங்களில் இராணுவத்தினர் கூடுதலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக பெல்ஜிய பிரதமர் ஷார்ல் மிஷேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெல்ஜியம் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்
விமான நிலையத்தில் 14 பேரும் ரயில் நிலையத்தில் 20 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக இப்போது வரும் தகவல்கள் கூறுகின்றன இந்தத் தாக்குதல்கள் கண்மூடித்தனமாக கோழைகளால் நடத்தப்பட்டவை என பெல்ஜிய அதிபர் ஷார்ல் மிஷேல் கூறியுள்ளார். இந்த நாள் ஒரு கருப்பு தினம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட சிலர் >தாக்குதல்களை அடுத்து பிரஸல்ஸ் நகரின் அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் முற்றாக மூடப்பட்டுள்ளன.
நகரின் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அணுமின் நிலையங்களில் மேம்பட்ட பாதுகாப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலகளவில் எழுந்துள்ள அச்சுறுத்தலில் வெளிப்பாடே பிரஸல்ஸ் நகரில் இடம்பெற்றத் தாக்குதல்கள் என பிரெஞ்ச் அதிபர் ஒலாந் கூறியுள்ளார்.
இப்படியான அச்சுறுத்தல்களுக்கு சர்வதேச அளவில் பதிலடி கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான நீண்டபோரை உலகம் எதிர்கொண்டு வருகிறது எனவும் பிரெஞ்ச் அதிபர் எச்சரித்துள்ளார்.< பிரசல்ஸின் பல இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் இதுவரை குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஐரோப்பா மீதான தாக்குதல் என பன்னாட்டுத் தலைவர்கள் கூறியுள்ளனர். >ஜாவுன்டெம் விமான நிலையத்தில் நடைபெற்றத் தாக்குதலில் 11 பேரும், பிரஸல்ஸ் சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்றத் தாக்குதலில் 15 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் குறைந்தது 35 பேர் காயமடைந்துள்ளனர் பெல்ஜியத்தில் நடைபெற்றுள்ள இத்தாக்குதல்கள் ஐரோப்பாவை இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் தெரிவித்துள்ளார். பிரசல்ஸ் சுரங்க ரயில் சேவை மூடப்பட்டுள்ளது >தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு அருகே இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திலுள்ள அனைவரும் அலுவலகத்தைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நடைபெற்றுள்ள இத்தாக்குதல்கள் பயங்கரவாத்ததுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் முடுக்கிவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன என்று பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் பெஹ்நாஹ் காசநோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பிரசல்ஸுக்கு வந்துசெல்லும் அனைத்து யூரோஸ்டார் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரஸ்ஸல்ஸ் நகரில் இடம்பெற்றத் தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து பெல்ஜியத்துக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடும் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் யூரோஸ்டார் மூலம் லீலுக்கு பயணம் செய்து அங்கிருந்து வாகனம் மூலம் பிரஸல்ஸ் செல்பவர்கள் சோதனைகளையும் தாமதங்களையும் சந்திக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரஸ்ஸல்ஸிலுள்ள அரண்மனையில் சந்தேகத்துக்கு இடமான பொதி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்வர்ப் ரயில் நிலையத்திலுள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு, பிரஸ்ஸல்ஸிலுள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என பெல்ஜிய அரச வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.< பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸின் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் கூறுகின்றன. ஜாவெண்டென் விமான நிலையத்தில் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன பிரஸ்ஸல்ஸ் நகரிலுள்ள ஜாவுண்டெம் விமான நிலையத்தில் இரண்டு குண்டுகளும், நகரின் மத்தியிலுள்ள சுரங்க ரயில் பாதையில் ஒரு குண்டும் வெடித்துள்ளன.
விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்து கிடப்பதையும், கூரையின் சில பகுதிகள் இடிந்து அந்த இடிபாடுகள் தரையில் விழுந்துள்ளதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.
இத்தாக்குதல்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பு அதியுயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜாவுண்டெம் விமான நிலையத்தில் உள்ளோர்களை வெளியெற்றும் பணி நடைபெறுகிறது.சுரங்க ரயில் பாதையும் மூடப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்புகளுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
பாரிஸ் குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த முக்கிய நபரான சாலஹ் அப்தஸ்லாம் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களாகும் நிலையில் இத்தாக்குதல்கள் நடைபெறுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக