காங்கிரஸ் கட்சியில் இருந்து தமாகா-வை
மீண்டும் துவங்கியதில் இருந்து, ஜி.கே.வாசன், அதிமுக ஆதரவு நிலைப்பாட்டையே
எடுத்து வருகிறார். ஆளும் அரசுக்கு எதிரான பிரச்னைகள் அனைத்திலும மிகவும்
அமைதியாகவே காட்சிகளை நகர்த்தினார்.அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி
ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும், ஜி.கே. வசானை முன்னின்று
பேசுவதால், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்கு எந்த தகவல் தெரியவில்லை.
இதனால், கூட்டணி குறித்து, ஜி.கே.வாசன் கூறும் தகவலே மூத்த தலைவர்களுக்கு
தெரிய வருகிறது ;இந்த நிலையில், அதிமுகவிடம் இருந்து,
கூட்டணிக்கான அழைப்பு வரும் என, ஜி.கே.வாசன் எதிர்பார்த்து காத்துள்ளார்.
அதற்கு முன்பு, அவரிடம் இருந்து தமாகா விரும்பும் தொகுதிகள் பட்டியல்
கேட்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சுமார் 50 தொகுதிகள் அடங்கிய பட்டியலை, கடந்த இரு நாட்களுக்கு முன்பு, போயஸ் கார்டனுக்கு ஜி.கே.வாசன் அனுப்பினார். அதில், 25 தொகுதிகளை தாமாகா கேட்டுள்ளது. ஆனால், அதிமுக தரப்பில் 15 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் தாமாகாவுக்கு வழங்கும் தொகுதிகளில் நேர்காணல் கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக