வெள்ளி, 25 மார்ச், 2016

தமிழ்நாட்டில் 62,500 குழந்தைத் திருமணங்கள்


கோயம்புத்தூர், மார்ச்24_ 2011ஆம ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வெளியான தகவல்களின்படி,  தமிழ்நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் 5,480, கோயம்புத்தூரில் 3,025, மதுரையில் 2,841, திருச்சியில் 1,966, சேலத்தில் 2,414, திருநெல்வேலியில் 2,360, திருப்பூரில் 2,239, தேனியில் 1,253 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் 15 வய துக்கு உட்பட்ட 5,480 பெண் குழந்தைகளுக்கு திரு மணம் நடைபெற்றுள்ளது.
சென்னையைத் தொடர்ந்து தொழில் நகரமாகிய கோயம் புத்தூரில் 15வயதுக்குட்பட்ட 3,025 பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது.
மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் 15 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் 2000 பேருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
குழந்தை திருமணத்துக்கு எதிரான செயற்பாட்டளர்கள் கூறும்போது, குழந்தைத் திருமணங்கள் ஏராளமாக கிராமப்புறப்பகுதிகளில் நடை பெற்று வருகின்றன. ஆனால், நகர்ப்பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் குழந்தைத் திருமண எண்ணிக்கையும் கூடுதலாகத் தெரிகிறது.  2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, வளர்ச்சி பெறாத மாநிலங்களாக உள்ள உத்தரப்பிரதேசத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம், பிகார் மாநிலத்தில் ஓர் லட்சத்து 90 ஆயிரம், ராஜஸ்தானில் ஓர் லட்சத்து 70 ஆயிரம் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாடு போன்ற வளர்ச்சி பெற்ற மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் இதுபோன்ற குழந்தைத் திருமணங்கள் நடை பெற்றுள்ளதாக புள்ளிவிவர அறிக்கை குறிப்பிடுகிறது.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரத் தகவல்களின்படி, தமிழ்நாட்டில் 15வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் 82.52 இலட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 62,500 பேருக்கு குழந்தை மணம் நடந்துள்ளது.
15 முதல் 18 வயதுக்குள் உள்ளவர்களிடையே குழந்தைத் திருமணங்கள் கூடுதலாக இருக் கும் என்றே கருதப்படுகிறது. ஆனாலும், போதுமான அளவில் அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதேநேரத்தில¢  15 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள்குறித்து 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விவரங்கள் பதிவாகி உள்ளன.
குழந்தைகளின் உரிமைகளுக் கான செயற¢பாட்டாளர்கள் குழந்தைத் திருமணங்கள் நடை பெறுவதை அவ்வப்போது களமிறங்கி தடுத்து வருகி றார்கள். பெரும்பாலும் பொரு ளாதாரத்தில் நலிவுற்றிருக்கும் குடும்பத்தவர்கள் தங்களின் பெண்குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து அனுப்பிவிடுகிறார்கள்.
இதுகுறித்து குழந்தைகளின் உரிமைச் செயற்பாட்டாளர் கே.கிருஷ்ணராஜ் கூறும்போது, “கோயம்புத்தூர் அருகில் உள்ள சிறு கிராமமான ஆலந் துறை கிராமத்தில் பருவம் அடைந்த உடனேயே அப் பெண்ணுக்கு திருமணத்தை செய்துவிடுகிறார்கள். பருவம் அடைந்தபிறகு பெண்களை திருமணம் செய்துவைக்காமல் இருப்பது பாதுகாப்பானதாக இல்லை என்று கருதியே அவ்வாறு செய்துவருகிறார்கள். பள்ளி மாணவிகள் தங்கள் கல்வியைத் தொடராமல் பள்ளியிலிருந்து இடையில் நின்று போவதற்கும்  இதுவே காரணமாகக் கூறப்படுகிறது’’ என்கிறார்.
சத்தியமங்கலத்தை அடுத் துள்ள குன்றி கிராமத்திலும் இதே போன்ற நிலையே இருப்பதாக குழந்தைகளின் உரிமைச் செயற்பாட்டாளர் டி.ராஜன் குறிப்பிட்டார்.  மேலும் அவர் கூறும்போது, “சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள கிராமத்தில்  மேல்நிலைப்பள்ளியே கிடையாது. மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால், 40 கி.மீ. தொலைவுக்கு செல்ல வேண்டும். அதனாலேயே பெரும்பாலான பெண் குழந்தைகள் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு முடித்தவுடனேயே திருமணம் செய்து வைக்கப்பட்டு விடுகிறார்கள்’’ என்றார்.
சிறு வயதில் திருமணம் செய்துகொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள், அல்லது காதலர்களாக ஓடிப்போய் மணம் புரிந்துகொள்கிறார்கள். கோயம்புத்தூர் குழந்தைகளுக் கான உதவி மய்ய ஒருங் கிணைப் பாளர் உமாதேவி கூறுகையில், “15வயது முதல் 18 வயது வரை உள்ள பெண்கள் தாங்களாகவும் ஓடிப்போய் திருமணத்தை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் கண்காணிப்புக்குழுக்கள் அமைப் பதன் மூலமாகவே குழந்தைத் திருமணங்களை முடிவுக்குக் கொண்டு வரமுடியும். மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தகவல்களின்படி, கிராமக் கண்காணிப்புக்குழுக்களை வலிமைப்படுத்த வேண்டியதாக இருக்கிறது. குழுவினரின் கவனத் திற்கு வராமலேயே பெரும்பாலான குழந்தைத் திருமணங்கள் நடந்து  முடிந்து விடுகின்றன. குழுவின் உறுப் பினர்களேகூட அறியாமையில் இருந்துவிடுகின்ற நிலையும் இருந்துவருகிறது’’ என்று குறிப்பிட்டார்.  viduthalai.in/

கருத்துகள் இல்லை: