அமைச்சர்களைத் தொடர்ந்து, அவர்களிடம் பி.ஏ.,க்களாக இருந்தவர்களின் சொத்து விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
அ.தி.மு.க., அமைச்சர்களில் சிலர் அளவுக்கு அதிகமாக, சொத்துக்களை
சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, கட்சியின் தலைமைக்கு
நிர்வாகிகள் பலர் புகார் மனுக்களை அனுப்பினர்.இதையடுத்து, அமைச்சர்களின்
சொத்துக்கள் குறித்து, தனியார் ஏஜன்சி விசாரணை நடத்தியது. இதில், அவர்கள்
செய்த முறைகேடுகள் தெரியவந்தன. அதன் காரணமாக, செல்வாக்கோடு வலம் வந்த,
அமைச்சர்கள்
சிலர் ஓரங்கட்டப்பட்டு உள்ளனர். பத்திரிக்கைகள் பக்கம், பக்கமாக எழுதிய போதெல்லாம் ஒன்னும் தெரியாத பாப்பாவுக்கு ,
இப்போ தேர்தல் நேரத்தின் போதுதான் இவர்கள் சேர்த்த சொத்துக்கள் பற்றி
தெரிந்ததா? எல்லாம் பங்கு தகராறில் வெடித்த விவகாரம்தான்.
இந்நிலையில், சில அமைச்சர்களை விட, அவர்களின் பி.ஏ.,க்கள் அதிக ஆட்டம் போட்டுள்ளனர்; ஏராளமான சொத்துக்களை சேர்த்துள்ளனர். மேலும், அமைச்சர்களின் சொத்து விவரங்களும், அவர்களுக்கு முழுமையாக தெரிந்துள்ளன.எனவே, அமைச்சர்களின் பி.ஏ.,க்கள் சேர்த்த சொத்து குறித்த விவரங்களை சேகரிக்கும் பொறுப்பையும், கட்சி தலைமை தனியார் ஏஜன்சியிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பி.ஏ.,க்கள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர். விரைவில், பி.ஏ.,க்கள் மீது நடவடிக்கை பாயலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் - தினமலர்.com

அ.தி.மு.க., - ஐ.டி., அணிசெயலர் பதவி பறிப்பு:
அ.தி.மு.க.,
தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் அஸ்பயர் சுவாமிநாதன்,அப்பொறுப்பில்
இருந்து விடுவிக்கப்பட்டது, கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.அ.தி.மு.க.,வில், தகவல் தொழில்நுட்ப அணி உருவாக அடித்தளமிட்டவர்
அஸ்பயர் சுவாமிநாதன். கட்சியின் இணையதளத்தை வடிவமைத்தது; 'ஆன்லைன்'
உறுப்பினர்
சேர்க்கையை துவக்கியது, கட்சி தொண்டர்கள் குறித்த விவரங்களை,
கம்ப்யூட்டர் மயமாக்கியது என, பல்வேறு பணிகளை செய்தார். அதனால், அவருக்கு
அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலர் பொறுப்பை, முதல்வர்
ஜெயலலிதா வழங்கினார். நேற்று திடீரென, அந்தப் பதவியில் இருந்து அவர்
விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, கோவை, சிங்காநல்லுார் தொகுதியைச்
சேர்ந்த ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.- நமது நிருபர் - தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக