வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

அனிதாவின் Love மோசடி லீலைகள் போலீஸ் விசாரணையில் அம்பலம்

சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக 12 லட்சம் சுருட்டிய
மோசடி ராணி கைது செய்யப்பட்டார். அவரிடம் பணத்தை இழந்து ஏமாந்த அப்பாவி இளைஞர்களிடம் காதல் லீலையிலும் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.கைதான மோசடி ராணி அனிதா (வயது 26). பி.சி.ஏ. பட்டதாரியான இவர், சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர். இவரது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக தெரிகிறது. தற்போது இவர், இரண்டாவதாக ஒருவரை மணந்து வாழ்கிறார். 1½ வயதில் மகனும் உள்ளான்.
அனிதா மீது சென்னை ஐகோர்ட் போலீஸ் நிலையத்தில் மலையரசன் உள்பட 4 இளைஞர்கள் பரபரப்பு புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில், ‘அனிதா சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சத்தை சுருட்டிவிட்டதாகவும், வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தை கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த புகார் மனு மீது ஐகோர்ட்டு உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், ஐகோர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்."

அனிதா மீது மோசடி மற்றும் கொலைமிரட்டல் சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அவரை விசாரணைக்கு போலீசார் அழைத்தபோது, சொகுசு காரில் வந்து இறங்கினார். தனது தந்தை அருப்புக்கோட்டையில் துணி மில் முதலாளியாக இருப்பதாகவும், தானும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலைபார்ப்பதாகவும், மோசடி எதிலும் தான் ஈடுபடவில்லை என்றும் கூறி போலீசாரிடம் கடும் மோதலில் அனிதா ஈடுபட்டார்.  ஆனால், அவர் 4 இளைஞர்களிடமும் வங்கிக்கணக்கு மூலம் பணம் வாங்கியிருந்ததால் வழக்கில் இருந்து தப்பமுடியவில்லை. நேற்று முன்தினம் போலீசார் அனிதாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, பரபரப்பு தகவல்கள் வெளியாகியது.

னிதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சிலரும் போலீசாரை வற்புறுத்தினார்கள். அதில், சுரேஷ்குமார் என்ற வக்கீல் அனிதாவின் மோசடி மற்றும் காதல் லீலைகள் பற்றி திடுக்கிடும் தகவல்களை போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

அவர் கூறிய தகவல்கள் :  அனிதா மீது தற்போது 4 பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவரிடம் வேலைவாய்ப்பு கேட்டு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏராளமான இளைஞர்கள் ஏமாந்துள்ளனர். ஏமாந்த இளைஞர்களின் பட்டியலை நாங்கள் தயாரித்து வருகிறோம். அவர் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக எங்களுக்கு முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. மோசடி செய்த பணத்தில் அவர் பெரும்பாக்கத்தில் வீடு கட்டுவதாகவும் தெரிகிறது.

அவர், இளைஞர்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர். பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற இடங்களில் நின்றுகொண்டு இளைஞர்களுக்கு காதல் வலை வீசுவார். தனது வலையில் விழும் இளைஞர்களிடம் ஒருமாதம் நெருக்கமாக பழகுவார். பின்னர் அந்த இளைஞர்களை ரகசிய திருமணம் கூட செய்துகொள்வார்.>அவரிடம் கைவசம் ஒரு தங்கச்சங்கிலி தயாராக இருக்கும். அந்த தங்கச் சங்கிலியை கேரளாவில் பகவதி அம்மன் கோவிலில் பூஜையில் வைத்து எடுத்தது என்றும், அந்த தங்கச்சங்கிலியை எனக்கு தாலியாக கட்டினால் நாம் சுபமாக வாழலாம் என்றும் இளைஞர்களிடம் ஆசைவார்த்தை கூறுவார். பின்னர் அந்த தங்கச் சங்கிலியை தாலியாக கட்டி இளைஞர்களோடு குடும்பம் நடத்துவார்."

அந்த இளைஞர்கள் மூலம் அவர்களது நண்பர்களிடம் பெரிய கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக பணம் கேட்பார். இதுபோல அவர் ஏராளமான இளைஞர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். சமீபத்தில் மழைவெள்ளம் ஏற்பட்டதால், கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலைவாங்கி தரமுடியவில்லை என்றும், ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாகவும் அனிதா தெரிவித்துள்ளாரஇவ்வாறு வக்கீல் கூறியதாக தெரியவந்துள்ளது.;

கைது செய்யப்பட்ட அனிதா நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மோசடி லீலைகளுக்கு பின்னணியாக மேலும் பலர் இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.  அனிதாவின் இந்த மோசடி லீலைகள் சென்னை ஐகோர்ட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  nakkheeran,in

கருத்துகள் இல்லை: