ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

தஸ்லீமா நஸ்ரின் :இந்து அடிப்படை வாதிகளை மட்டும் ஏன் தாக்குகிறார்கள்? All religions are anti-woman: Taslima Nasrin


கேரள மாநிலம், கோழிக்கோட்டில் சனிக்கிழமை இலக்கியத் திருவிழா நடைபெற்றது. அப்போது சகிப்பின்மை குறித்த விவாதத்தின்போது தஸ்லீமா பேசியதாவது: இந்தியா சகிப்புத்தன்மை இல்லாத நாடு என்று நான் நினைக்கவில்லை. பெரும்பாலான மக்கள் மற்றவர்களின் மத நம்பிக்கையின் மீது முழு சகிப்புத்தன்மை கொண்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். இந்தியாவில் மதச்சார்பின்மைக்கும், அடிப்படைவாதத்துக்கும் இடையேயும், புதுமைக்கும், பாரம்பரியத்துக்கும் இடையேயும், சுதந்திரத்தை மதிப்பவர்களுக்கும், மதிக்காதவர்களுக்கும் இடையே நிலவுவதுதான் உண்மையான மோதலாகும். அரசு நிர்வாகத்தில் மதத்தின் குறுக்கீடு இருக்கக் கூடாது. வங்கதேசத்தில் சட்டமியற்றும் நடவடிக்கையில் மதத்தின் தாக்கம் காரணமாக, ஹிந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு மதங்களைச் சேர்ந்த பெண்களும் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது
.
இந்தியாவில் உள்ள மதச்சார்பின்மைவாதிகள், ஹிந்து அடிப்படைவாதிகளை மட்டும் ஏன் கேள்வி எழுப்புகின்றனர் என்பதை கண்டு வியப்படைகிறேன்.
போலியான மதச்சார்பின்மை அடிப்படையிலான ஜனநாயகம் என்பது உண்மையான ஜனநாயகம் அல்ல.
இந்தியாவில் உள்ள சட்டங்கள் சகிப்பின்மையை ஆதரிக்கவில்லை. ஆனால் சகிப்புத்தன்மையற்றவர்கள் ஏராளமாக உள்ளனர் என்றார் அவர்.
வங்கதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்களால் ஹிந்துக்கள் எந்த மாதிரியான துன்பங்களை அடைந்துள்ளனர் என்பது குறித்து 1994-ஆம் ஆண்டு தஸ்லீமா நாவல் ஒன்றை எழுதினார்.
இதனால் முஸ்லிம் மத அடிப்பபடைவாதிகளின் கோபத்துக்கு ஆளான தஸ்லீமாவுக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் வசித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை: