திங்கள், 8 பிப்ரவரி, 2016

பேஸ்புக் நிறுவனத்திற்கு பின்னடைவு: இணையதள சமநிலைக்கு டிராய் ஆதரவு

புதுடில்லி: இலவச இணையதள சேவை என்ற பேஸ்புக் நிறுவனத்தின் திட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவில் இணையதள சமநிலைக்கு டிராய் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இணையதள சேவையில் உள்ள மாறுபட்ட கட்டணங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன்படி அனைத்து இணையதள சேவைக்கும் சமமான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இதனை மீறும்பட்சத்தில் ஒரு நாளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என டிராய் எச்சரித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம், இணையதள சேவையில் வெவ்வெறு விலைகள் என்ற நோக்கத்திற்கு அடித்தளமிடும் திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் உள்ளிட்ட அவசர காலகட்டங்களில், இணையதள சேவைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் டிராய் உத்தரவிட்டுள்ளது.


பேஸ்புக்கை பயன்படுத்தும்போது இணையதள கட்டணம் கிடையாது என்ற திட்டத்துடன், பிரி பேசிக்ஸ் என்ற திட்டத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் கொண்டு வர இருந்தது. ஆனால், டிராய் உத்தரவால், இந்த திட்டங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரி பேசிக்ஸ் திட்டத்திற்கு டிராய் தடை விதித்தது. டிராயின் இந்த உத்தரவிற்கு இணையதள சேவையை பயன்படுத்துபவர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் டிராயின் உத்தரவு ஏமாற்றம் அளிக்கிறது என்றும் தங்கள் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது தினமலர்.com

கருத்துகள் இல்லை: