கன்னியாகுமரி: களியக்காவிளையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அதிமுக
பேனரை அகற்றிய காவல் துறை ஆய்வாளரை அதிமுக பிரமுகர் ஒருவர் தொலைபேசியில்
மிரட்டிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி
வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினர்
உரிய அனுமதியின்றி பேனர் வைத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து போக்குவரத்து
இடையூராக இருந்த பேனர்களை களியக்காவிளை காவல் ஆய்வாளர் சாம்சன் அகற்ற
உத்தரவிட்டதாக தெரிகிறது.
இதை கேள்விப்பட்ட களியக்காவிளை அதிமுக ஒன்றிய செயலாளர் உதயகுமார்
சாம்சனுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த உரையாடலில்
உதயகுமார், ஆய்வாளர் சாம்சனை ஒருமையில் திட்டியுள்ளார்.
ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆளும் கட்சி
பிரமுகர் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் கட்சியினரிடமு,
காவல் அதிகாரிகளிடையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
://tamil.oneindia.com
://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக