திங்கள், 8 பிப்ரவரி, 2016

மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்‘ திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கும் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்‘ திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்கூட்டர் ‘ஆம்புலன்ஸ்‘ தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் விரிவடைந்து வருகின்றன.


பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், முதல்&அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தல், புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 52 பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 97  பேருந்துகள், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 85  பேருந்துகள், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 93  பேருந்துகள், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 202 பேருந்துகள். dailaythanthi.com

கருத்துகள் இல்லை: