வியாழன், 11 பிப்ரவரி, 2016

விஜயதரணி : ஜெயலலிதா காலில் கோகுல இந்திரா வகையறாக்கள் போன்று நான் விழவில்லை


ஜெயலலிதாவை எதிர்த்தவர்களெல்லாம் அவருடைய காலில் வந்து விழுவது தன் வரலாறு. இளங்கோவனுடன் மோதி பதவியை இழந்த விஜயதரணி தற்போது அம்மாவின் காலடியில் விழுந்துள்ளார் என்பது போல் கிண்டலடித்து பேசி வந்த கோகுல இந்திராவுக்கு விஜயதரணி பதில் கூறியுள்ளார்.அம்மா காலில் விழுந்தேன் என்று என்னை மேடைக்கு மேடை விமர்சிக்கிறார் கோகுல இந்திரா. ஜெயலலிதா காலில் எல்லோரும் விழுகிறார்கள். இதை அவர் கொச்சைப்படுத்துகிறாரா? கோகுல இந்திராவுக்கு கட்சியில ஏதோ பயம் ஏற்பட்டுவிட்டது.அவர் ஜெயலலிதாவை இழிவுபடுத்துகிறாரா என்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறிய விஜயதரணி மேலும் தான் யார் காலிலும் விழவில்லை என மறுத்தார். கோகுல இந்திரா கட்சி தலைவியையே அவமதிக்கும் பெருமையை பெறுகிறார்.
நான் யார் காலிலும் விழவில்லை. நான் ஜெயலலிதா காலில் விழுந்த போட்டோ, வீடியோ ஆதாரம் இருந்தால் அதை வெளியிடட்டும் என கோகுல இந்திராவுக்கு சவால் விடுத்தார் விஜயதரணி.வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: