திங்கள், 8 பிப்ரவரி, 2016

எஸ் வி எஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்யவில்லை...பிரேத பரிசோதனையில் தெரியவந்தது

கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா
மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த 3 மாணவிகள் கடந்த மாதம் 23-ம் தேதி கல்லூரி அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். கல்லூரி நிர்வாகத்தின் சித்ரவதை காரணமாக அவர்கள் மூவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவர்களின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாணவிகள் உயிரிழப்பு தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. கல்லூரி தாளாளர் வாசுகி, நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மாணவிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.


இந்நிலையில், இவ்வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாணவிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். அதில், மாணவிகள் மூவரும் நீரில் மூழ்கியதால் உயிரிழக்க வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை நகல்கள் மனுதாரர்கள் தரப்புக்கு வழங்கப்பட்டது. மேலும், மறு பிரேத பரிசோதனை தேவையா என்பதை மனுதாரர்கள் தரப்பு நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

நீரில் மூழ்கியதால் மாணவிகள் உயிரிழக்கவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: