வியாழன், 11 பிப்ரவரி, 2016

தினமலர்: ஸ்டாலின் தரப்பால் ஓரம் கட்டப்பட்டவர்கள் விருப்புமனு தாக்கல் செய்ய கலைஞர் வேண்டுகோள்?


கலைஞர் உத்தரவுப்படி, விருப்ப மனு தாக்கல் செய்துள்ள சிலர்:
* முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம்
* முன்னாள் அமைச்சர்கள் பிச்சாண்டி, திருச்சி செல்வராஜ்
* முன்னாள் எம்.பி.,க்கள் முகமது சகி, பவானி ராஜேந்திரன்
* முன்னாள் செய்தி தொடர்பாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
* முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன்
* முன்னாள் டில்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்
* மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர்ராமச்சந்திரன்
* ஈரோடு ராஜ்குமார் மன்றாடியார்.
தி.மு.க.,வில் பதவி தராமல் ஓரங்கட்டப்பட்ட பலரையும், உடனடியாக விருப்ப மனு தாக்கல் செய்யும்படி, தி.மு.க., தலைவர் கருணாநிதி உத்தரவிட்டிருப்பது, கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், 'சீட்' கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவர்கள், உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தரப்பினரால், கட்சி பதவி எதுவும் தராமல் ஓரம் கட்டப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுத்து, பட்டியல் தரும்படி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் ஆதரவாளர் களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட வாரியாக கணக்கெடுக்கப்பட்டு, பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரையும், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும்படி, கருணாநிதி உத்தரவிட, அவர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். அத்துடன், வேட்பாளர் தேர்விலும், சில நடைமுறைகளை பின்பற்ற, கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, வேட்பாளர் தேர்வில், பொருளாளர் ஸ்டாலின், மகளிர் அணிசெயலர் கனிமொழி, மகள் செல்வி, மகன் தமிழரசு ஆதரவாளர்கள் என, பலருக்கும் வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கருணாநிதி உத்தரவுப்படி, விருப்ப மனு தாக்கல் செய்துள்ள சிலர்:
* முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம்
* முன்னாள் அமைச்சர்கள் பிச்சாண்டி, திருச்சி செல்வராஜ்
* முன்னாள் எம்.பி.,க்கள் முகமது சகி, பவானி ராஜேந்திரன்
* முன்னாள் செய்தி தொடர்பாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
* முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன்
* முன்னாள் டில்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்
* மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர்ராமச்சந்திரன்
* ஈரோடு ராஜ்குமார் மன்றாடியார்.

13ல் தேர்தல் அறிக்கை:
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில், மகளிர் அணி மாநில செயலர் கனிமொழி உட்பட, ஒன்பது பேர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, விவரங்களை திரட்டி வந்து, தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளனர். இந்தத் தேர்தல் அறிக்கை, பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க கூடியதாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல, இலவச பொருட்களை வழங்கும் தேர்தல் அறிக்கையாக தயார் செய்யப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. கருணாநிதியின் யோசனைகளையும் சேர்த்து, இறுதி வடிவம் பெற்றுள்ள தேர்தல் அறிக்கை, வரும், 13ல், அறிவாலயத்தில் கருணாநிதியால் வெளியிடப்படுகிறது.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: