ஜெஎன்யு
மாணவர் சங்க தலைவர் கண்ஹையா குமார் கைது செய்யப்பட்ட பின், சமூக
வலைத்தளங்களிலும், சில தொலைகாட்சி சேனல்களிலும் பரவிய வீடியோ போலியானது என
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த வீடியோக்களை குறித்து பல
கேள்விகள் எழுந்துள்ளன.
கண்ஹயா குமார், கைது செய்யப்பட்ட போது, தேசத்திற்கு எதிராக அவர் கோஷம் எழுப்பியதற்கான தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டது.
அந்த வீடியோ பிப்ரவரி 11 அன்று எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அந்த வீடியோவில், பிப்ரவரி 9 அன்று , அப்சல் குருவுக்கு ஆதரவாக பல்கலைகழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் மூளையாக இருந்து செயல்படுபவர் என டெல்லி போலீசாரால் அழைக்கப்படுபவரான உமர் காலித்துக்கு அருகில் கண்ஹையா குமார் நின்றிருந்ததாக கூறப்பட்டது. கடந்த புதன்கிழமை ஏபிபி நியூஸ் சேனல், அந்த நிகழ்ச்சியை அவர்களது கேமராவை கொண்டு வீடியோ எடுத்ததாக கூறியது. “அவர் தனது முழு சக்தியையும் திரட்டி கோஷம் போடவே மற்ற மாணவர்களும் அவரை தொடர்ந்து கோஷம் போட்டனர். ஆனால், அவர் தேசத்துக்கு எதிராக கோஷம் போடவில்லை.அவரது கோஷத்தில் வறுமையிலிருந்து சுதந்திரம் வேண்டும், ரத்தத்தை குடிக்கும் வகுப்புவாதத்திலிருந்து விடுதலை வேண்டும். சமூக ஏற்றத்தாழ்விலிருந்து விடுதலை வேண்டும் என்று கோஷம் போட்டார். மற்றபடி தேசத்துக்கு எதிராக எவ்வித கோஷமும் அவர் போடவில்லை.” என ஏபிபி நியூஸ் சேனல் கூறியுள்ளது.
ஒரு நாளுக்கு பின், இந்தியா டுடே இரண்டு வீடியோக்களை இணைத்து எவ்வாறு ஒரு வீடியோ உருவாக்கப்பட்டது என விவரித்துள்ளது.
பிப்ரவரி 9 அன்று எடுக்கப்பட்ட வீடியோவில், மாணவர் குழு ஒன்று காஷ்மீர் பிரச்சினைக்காக கோஷம் போட்டது. அதில் எடுக்கப்பட்ட வீடியோவில் உள்ள ஆடியோவை தனியாக பிரித்து, அதனை இரண்டு நாட்களுக்கு பின், பிப்ரவரி 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட வீடியோவுடன் இணைத்துள்ளனர்.அதனால் தான் அந்த வீடியோவில் உள்ள ஆடியோ ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வகையில் உள்ளது” என கூறியுள்ளது. - See more .thenewsminute.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக