இந்தியாவில் தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சிக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் பல்வேறு
நகரங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமரின்
அழைப்பை ஏற்று முக்கிய பிரமுகர்கள் இப்பணியினை தொடங்கி வைத்து ஊக்கம்
கொடுத்து வருகின்றனர். இவ்வாறு தூய்மை இந்தியா திட்டப்பணிகள் நடைபெறும்
பகுதிகளை ஆய்வு செய்து, தூய்மையான நகரங்கள் குறித்த பட்டியலை நகர்ப்புற
மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் கர்நாடக மாநிலம் மைசூர்
தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளது. சண்டிகர் இரண்டாவது இடத்தையும்,
திருச்சி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து டெல்லி, விசாகப்பட்டினம், சூரத் (குஜராத்), ராஜ்கோட்(குஜராத்), காங்டாக் (சிக்கிம்), பிம்ப்ரி சிந்துவாத் (மகாராஷ்டிரா), மும்பை ஆகிய நகரங்கள் டாப்-10 பட்டியலில் உள்ளன. சென்னை 36-வது இடத்தில் பின்தங்கிவிட்டது.
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மோசமான கடைசி 10 நகரங்களில் வாரணாசி, பாட்னா ஆகிய நகரங்களும் உள்ளன மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக