செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

இடைக்கால பட்ஜெட் கடன் 2,47,031 கோடிகள்...ஒவ்வொருவர் பேரிலும்..35,000 ரூபாய் கடன்...புரட்சி சாதனைங்கிறது இதைதான்

ஐந்தாண்டு ஆட்சி முடியும் தருவாயில். ...; ஜெயா அரசு சாதனை. .. 35,000 ரூபாய் கடன் ஒவ்வொருவர் தலை மீது சுமத்தப்பட்டுள்ளது... மொத்த கடன் இடைக்கால பட்ஜெட் படி 2,47,031 கோடிகள் தான்..
சென்னை அ.தி.மு.க. தலைமையிலான இந்த ஆட்சி, வரும் மே மாதத்தோடு நிறைவடைகிறது. எனவே தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு, மார்ச் தொடக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தோடு ஆட்சி முடிவதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் தமிழக அரசு தாக்கல் செய்கிறது.  இடைக்கால பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதை தாக்கல் செய்கிறார். இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் கடந்த 8-ந் தேதி வெளியிட்டிருந்தார்.  நாம எப்படி நாசமா போனாலும் பரவாயில்லை எங்க இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து ஆட்சியோ  காட்சியோ...அதாய்ன் நாமக்கு வேணும்


அதன்படி இன்று காலை சட்டசபை கூடியது. நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* இடைக்கால பட்ஜெட்டில் எந்த புது அறிவிப்பும் எல்லை

* தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8.01 சதவீதம் எட்டி உள்ளது

* நாட்டில் 2-வது பெரிய பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது:

* 60, 610 கோடி ரூபாய் இடைகால நிதியாக ஒதுக்கீடு

* முதுமை முயற்சி திட்டங்களுக்கு ரூ 150 கோடி ஒதுகீடு

* வனத்துறைக்கு ரூ677.93 கோடி நிதி ஒதுக்கீடு

* புதுவாழ்வு திட்டம் முன்னுதாரணமாக விளங்குகிறது.நாட்டிலேயே இரண்டாவது இடம் பிடித்து உள்ளது.9.8 லட்சம் குடும்பங்கள் புதுவாழ்வு திட்டத்தால் பயனடைந்து உள்ளன.

* புதுவாழ்வுத் திட்டத்துக்கு உலக வங்கி ரூ900 கோடி நிதி- ஓபிஎஸ்

* அண்டை மாநிலங்களை விட தமிழகம் பொருளாதார வளர்ச்சியை எட்டி உள்ளது.

* தமிழ்நாடு நகரபுற வளர்ச்சிக்காக இடைக்கல பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கபட்டு உள்ளது

* மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் ரூ100 கோடி ஒதுக்கீடு

* 1,13.000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் மூல தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கபட்டு உள்ளது.

* திறன் மேம்பாடு திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு

* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.27 கோடி ஒதுக்கபட்டு உள்ளது.

* இடைக்கால பட்ஜெட்டில் காவல் துறை மேம்பாட்டிற்கு ரூ.6099 கோடி ஒதுக்கீடு

* தீயணைப்பு துறைக்கு ரூ.227 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* அத்திக்கடவு- அவினாசி  திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திருத்திய கருத்துரு அனுப்பபடும். இந்த திட்டத்திற்குகான ஆரமப  கட்ட பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.

*  மகாமகம் சிறப்பாக நடைபெற ரூ135 கோடி நிதி ஒதுக்கீடு

* மின்சார துறைக்கு ரூ13,819 கோடி நிதி ஒதுக்கீடு

* 10,000க்கும் மேலான இசேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழரை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்

* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு சீராக உள்ளது

* போர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்பு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன

* அம்மா திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் 50.50 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை

* இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ6,938.57 கோடி நிதி ஒதுக்கீடு

* சுகாதாரத் துறைக்கு ரூ9,350 கோடி நிதி ஒதுக்கீடு

* 5 ஆண்டுகளில் 28 லட்சம் வெள்ளாடு, செம்மறியாடுகள் வழங்கப்பட்டுள்ளன

* சுற்றுலாதுறைக்கு ரூ86. கோடி ஒதுக்கீடு

* மகப்பேறு உதவி திட்டத்திற்கு  668 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கீடு

* மீனவர் நலனுக்கு ரூ742 கோடி ஒதுக்கீடு

* மாநில மொத்த உற்பத்தியில் கடன் 19% மட்டுமே

* உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ2,42,000 கோடி முதலீட்டுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது

* அரசின் நிதிப்பற்றாக்குறை அடுத்த ஆண்டில் ரூ9,000 கோடியாக இருக்கும்

* உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 4.73 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

* விற்பனை வரி குறைவால் தமிழக அரசுக்கு ரூ4 ஆயிரம் கோடி இழப்பு

* 2016-17-ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி உயரும்

* தமிழக அரசின் கடன் ரூ2,47,031 கோடியாக இருக்கும்  dailythanthi.com

கருத்துகள் இல்லை: