உலக வரலாற்றில் முதன்முதலாக முஸ்லீம்களை
அதிகமாக கொண்ட ஒரு நாடு இந்து மதம் சார்ந்த திருமனத்தை சட்டபூர்வமாக
அங்கீகரித்துள்ளது. சுமார் 70 வருடங்களாக பாகிஸ்தான் வாழ் இந்து சமுகமானது
தங்களின் திருமணத்திற்கான சட்ட உரிமைகளை கோரிவந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இந்துக்கள் அதிகமாக வசிக்கும் (3 மில்லியன்) சிந்து மாகணத்தில் மேற்படி திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் நிகழ்வு அம்மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், கட்டாய திருமணங்கள், குழந்தைகள் திருமணங்கள், விதவைகளுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமை என்பவற்றில் பல்வேறு குறைகளை கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நாடு தழுவிய இந்துக்களுக்கான பாதுகாப்பை சட்பூர்வமானதாக மாற்றுவதற்கும், இதை நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் வாழ் கிறிஸ்தவர்வர்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்யும் உரிமையை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின் மூலம் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த 18 வயதிற்கும் மேற்பட்ட இந்துக்கள் தங்கள் திருமணத்தை சட்டபூர்வமாக பதிவு செய்து கொள்ளலாம்.
எனினும் மேற்படி சட்டம் மூலம், திருமணத்தில் இணைபவர்களில் யாராவது ஒருவர் மதமாறும் பட்சத்தில் திருமணம் ரத்தாகிவிடும் எனும் சர்ச்சைக்குரிய ஏற்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் வங்கி கணக்குகள் துவங்குவதற்கும், விசாக்களை பெறுவதற்கும், அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு மற்றும் சொத்து ரீதியிலான பங்குகளை பெறுவதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு கிடைக்கும் திருமண உறுதிப்பத்திரமானது மேற்கூறிய அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வாக அமையும் எனலாம். பாகிஸ்தானில் 2 சதவீதற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. dailythanthi.con

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக