திங்கள், 15 பிப்ரவரி, 2016

மே.வங்கத்தில் காங்கிரஸ் கம்யுனிஸ்ட் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் முடிவு

புதுடில்லி:தமிழகத்தில், தி.மு.க., உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில்,
சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மேற்கு வங்க மாநிலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுப்பதை, ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில
சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. மேற்கு வங்கத்தில், 2011 தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தலை சந்தித்தது காங்கிரஸ்; பின், மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டது திரிணமுல் காங்கிரஸ்.இதனால், வரும் சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணிஅமைத்து தேர்தலை சந்திக்கலாம்' என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை சமீபத்தில் சந்தித்த கட்சியின் மாநிலத் தலைவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டம், அந்த கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி தலைமையில் நாளை நடக்கிறது. இதில், சட்டசபை தேர்தல் குறித்து, அந்தக் கட்சி எடுக்கும் முடிவுக்காக காத்திருப்பது என, காங்கிரஸ் தற்போது திட்டமிட்டுள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: