ராணிப்பேட்டை தொல்தொழிற்சாலை வீடியோ Dark side of Tamilnadu Leather Products பசுநேசர்கள் எங்கே?
பிரம்மாண்டமான சுற்றுச்சுவர் இடிந்து கழிவுநீர் வெள்ளம் பாய்ந்து, உறங்கிக் கொண்டிருந்த வெளிமாநில கொத்தடிமைத் தொழி லாளர்கள் பத்து பேர் கொல்லப்பட்டார்கள். இத னால் ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கிய 67 தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. முதலாளிகள், நிர்வாகிகள், அரசு அதி காரிகள் என பத்துபேர் கைது செய்யப்பட்டார்கள்.
கடந்த ஆண்டு நடந்த இந்தக் கொடுமையை மக்கள் மறக்கவில்லை. ""இனிமேல் தொழிலாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்து வோம், சுற்றுச் சூழலை மாசு படாமல் பார்த்துக்கொள் வோம்'' என்று நீதிமன்றத்தில் வாக்குறுதிகளை அளித்து ஜாமீனில் வெளியே வந்தவர் கள், தோல் தொழிற்சாலை களைத் திறந்தவர்கள்... எல்லாவற்றையும் மறந்துவிட் டார்கள்.
பழைய குருடி கதவைத் திறடி என்றுதான் இந்தத் தொழிற்சாலைகள் நடக்கின்றன.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக