வியாழன், 22 மே, 2014

Saudi மக்காவில் SR4.5 மில்லியன் நகை கொள்ளை !

சிக்கிய நகை மற்றும் பணம்புனித யாத்திரை செல்லும்  மக்காவிலேயே சவுதி ரியால் 4.5 மில்லியன் பெறுமதியுள்ள நகைகளை கொள்ளையடித்த 4 பேர், திருட்டு நடந்து 24 மணி நேரத்துக்குள் அகப்பட்டுள்ளார்கள். மக்கா சி.ஐ.டி. போலீஸால் கைது செய்யப்பட்டுள்ள இந்த நால்வரும், ஏமன் நாட்டவர்கள்.
இரவில் மக்காவில் உள்ள நகைக்கடை ஒன்றின் காங்கிரீட் சுவரில் துவாரம் ஏற்படுத்திய இந்த கும்பல், ஆக்சிஜன் சக்தி டார்ச் ஒன்றின் உதவியுடன் உள்ளேயிருந்த உருக்கு சுவரையும் வெட்டி உள்ளே நுழைந்தனர்.
அதையடுத்து அங்குள்ள எலக்ட்ரிக் ஒயர்களை வெட்டி பாதுகாப்பு கருவிகளை செயலிழக்க வைத்தனர்.  சவுதியை பற்றியும் மக்காவை பற்றியும்  நம்ப A.R.ரஹ்மான் ரொம்ப அலட்டுவரே ?

இதையடுத்து, சவுதி ரியால் 4.5 மில்லியன் பெறுமதியுள்ள நகைகளை எடுத்துக்கொண்டு, கிளம்பி விட்டனர். சிக்கிய நகை மற்றும் பணம்
மறுநாள் காலை கடை உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது, கொள்ளை நடந்தது தெரியவந்தது. போலீஸ் வந்தது. சில கைரேகைகள் சிக்கின. அத்துடன் செயலிழக்கப்பட்டிராத சில செக்யூரிட்டி கேமராக்களிலும் கொள்ளையர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தன.
மக்கா போலீஸ் இலாகா சி.ஐ.டி. பிரிவு இயக்குனர் கர்னல் மொஹமெட் அல்வாதியானியால் அமைக்கப்பட்ட சிறப்பு குழு, கொள்ளையர்களை அடையாளம் கண்டது.
சி.ஐ.டி. டீம், கொள்ளையரின் இருப்பிடத்துக்கு சென்றபோது, அவர்கள் கொள்ளையிடப்பட்ட நகைகளை பங்கு பிரித்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் தங்கியிருந்த இடத்தில் 25 கிலோ தங்கம், மற்றும் பெருமளவு பணம் சிக்கியது.  அதை, அருகில் உள்ள போட்டோவில் பார்க்கவும்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: