திருவனந்தபுரம்:
24 வருடமாக திரைக்கு வராமல் முடங்கி கிடக்கிறது அம்பேத்கர் வாழ்க்கை
சரித்திர படம். சட்ட மேதை அம்பேத்கர் வாழ்க்கை சரித்திர படம் மலையாளத்தில்
உருவானது. அம்பேத்கர் வேடத்தில் மம்முட்டி நடித்தார். 1990ம் ஆண்டு உருவான
இப்படம் முடிந்து 24 வருடத்துக்கு மேல் ஆகியும் ரிலீஸ் ஆகாமல் முடங்கி
கிடக்கிறது. ‘படத்தை ரிலீஸ் செய்யாமல் தடுத்து வைத்திருப்பது ஏன்? என்று
மல்லுவுட் குணச்சித்திர நடிகர் இன்னசென்ட் கேள்வி எழுப்பி
உள்ளார்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் சாலக்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். அவர் கூறியதாவது:1990ல் தயாரிக்கப்பட்ட அம்பேத்கர் படம் முடிவடைந்து 24 ஆண்டுகள் ஆகியும் ரிலீஸ் ஆகாமல் இருப்பது எதிர்பாராதது. அப்போதைய மத்திய அரசு இப்படத்தை தயாரிக்க பெரும் தொகை ஒதுக்கி தந்தது. இவ்வளவு செலவில் உருவாக்கப்பட்ட படம் இன்னமும் ரிலீஸ் செய்யாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பது ஏன் என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது. இப்படத்தை ரிலீஸ் செய்து கொண்டு வருவதற்காக நான் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு இன்னசென்ட் கூறினார். - tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக