புதுடில்லி: நாட்டின், 15வது பிரதமராக, பா.ஜ.,வின் நரேந்திர மோடி, வரும்
திங்கள் கிழமை பொறுப்பேற்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு,
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கன் அதிபர் கர்சாய், இலங்கை அதிபர்
ராஜபக்ஷேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க
ராஜபக்ஷே உறுதி தெரிவித்துஉள்ளதால், இலங்கை தமிழர் விவகாரத்தை காரணம்
காட்டி, பா.ஜ., கூட்டணி கட்சிகளின் தலைவர்களான, ம.தி.மு.க.,வின் வைகோ,
பா.ம.க.,வின் அன்புமணி ஆகியோர் அந்தநிகழ்ச்சியில் பங்கேற்பரா என்ற கேள்வி
எழுந்துள்ளது.
டில்லி, பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று முன்தினம்
நடந்த, பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டத்தில், லோக்சபா, பா.ஜ., கட்சித்
தலைவராக, ஒருமனதாக மோடி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவரை பிரதமராக
அங்கீகரித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடிதம் வழங்கியுள்ளார்.
அதையடுத்து,
இந்தமாதம் 26 மாலை, 6:00 மணிக்கு, டில்லி, ராஷ்டிரபதி பவனில், பிரதமராக
மோடி பதவியேற்க உள்ளார். அவருக்கு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி பதவிப்
பிரமாணம் செய்து வைக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை, ஜனாதிபதி மாளிகை
அதிகாரிகளும், பா.ஜ.,வின் மூத்த தலைவர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
3,000 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக, டில்லி,
ஜனாதிபதி மாளிகையின் வளாகத்தில், நட்சத்திர ஓட்டல்கள் தோற்கும் வகையில்,
பந்தல் மற்றும் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. வாராது வந்த மாமணி போல்,
கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள, பா.ஜ., முடிவு
செய்துள்ளது. மோடி பதவியேற்பு விழாவை, பிரமாண்ட விழாவாக நடத்திக் காண்பிக்கவும், அதன் மூலம் தங்களின் செல்வாக்கு மற்றும் வித்தியாசமான அரசியல் அணுகுமுறைகளை பிற கட்சிகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் வெளிப்படுத்தவும், பா.ஜ., முடிவு செய்துள்ளது. அந்த வகையில், அண்டை நாடாக இருந்த போதிலும், சண்டை நாடாக விளங்கும் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக, கடந்த ஆண்டு, நவாஸ் ஷெரீப் பொறுப்பேற்ற போது, இஸ்லாமாபாத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, அப்போது இந்திய பிரதமராக இருந்த, மன்மோகன் சிங்கிற்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்தது; அதை, மன்மோகன் சிங் நிராகரித்து விட்டார். எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை
மற்றும் இந்திய வீரர்கள் இருவரை, பாகிஸ்தான் ராணுவம் தலையை வெட்டிக் கொன்றதால் ஏற்பட்ட கோபத்தில், நவாஸ் பதவியேற்பு விழாவை, மன்மோகன் புறக்கணித்தார்.
வெளியுறவுத் துறை: நிலைமை இவ்வாறு இருக்க, மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க, இந்திய வெளியுறவுத் துறை செயலர், சுஜாதா சிங் நேற்று அனுப்பிய கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ள பாகிஸ்தான் அரசு, மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது; எனினும், நேற்று வரை உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அது போல், இலங்கை தமிழர் விவகாரத்தால், அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே மட்டுமின்றி, இந்தியா வரும் சிங்களர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், டில்லி வருமாறு ராஜபக்ஷேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை எதிர்பார்த்து காத்திருந்தது போல், 'கண்டிப்பாக வருவேன்' என, ராஜபக்ஷேவும் பதில் அளித்துள்ளார். மேலும், உள்நாட்டு தீவிரவாதத்தாலும், தலிபான் பயங்கரவாதிகளாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன் நாட்டின் அதிபர் கர்சாய் உட்பட, 'சார்க்' அமைப்பின் அனைத்து நாடுகளின்
தலைவர்களுக்கும், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தெற்காசிய வட்டாரத்தில், இந்தியாவின் ஆளுமையை வெளிப்படுத்தவும், அந்நாடுகளுடன் மேலும் நட்புறவை மேம்படுத்தவும், பா.ஜ., விரும்புவது தெளிவாக தெரிகிறது. சார்க் நாடுகளின் அமைப்பில் இடம் பெற்றுள்ள, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் நாடுகளின் தலைவர்கள், ஏற்கனவே மோடியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பங்கேற்பர் என்பதால், மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி, 'மினி சார்க்' மாநாடாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.'ரியாக்ஷன்' என்ன? ஆனால், இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருவதால், அவருக்கு எதிராக தமிழகத்தில் குரல் கொடுத்து வரும், ம.தி.மு.க., மற்றும் பா.ம.க., கட்சிகள், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதால், அந்த கட்சிகளின் தலைவர்களான வைகோ மற்றும் அன்புமணி எம்.பி., ஆகியோர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பரா... அவ்வாறு பங்கேற்கும் போது, ராஜபக்?ஷேவை அவர்கள் சந்திக்கும் போது, அவர்களின், 'ரியாக்?ஷன்' எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக