வியாழன், 22 மே, 2014

ராகுல் காந்தியை முன்னிறுத்தியதே காங். படுதோல்விக்கு காரணம் ! கூட்டணி கட்சி புகார் !

டெல்லி: மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை முன்னிறுத்தியதே காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு காரணம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் குற்றம்சாட்டியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் அதிகாரப்பூர்வ நாளேடான சந்திரிகாவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் ராகுல் காந்தியின் ஒரு நபர் ராஜ்ஜியம் எடுபடவில்லை என விமர்சிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கு செல்வது மட்டுமே மக்களின் ஆதரவை பெறுவதற்கு போதுமானது அல்ல என்று ராகுல் உணரத் தவறிவிட்டதாகவும் அக்கட்டுரையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


மாநில அரசில் கூட ராகுல் காந்தி எந்த பதவியையும் வகிக்காததை சுட்டிக்காட்டியுள்ள கட்டுரை ஆசிரியர் அனுபவமற்ற ராகுல் காந்தியை முன்னிறுத்தியதே படுதோல்விக்கு ககாரணம் என்று கடுமையாக சாடியுள்ளார். ஆனால் ராகுல் காந்தியை மட்டும் தோல்விக்கு காரணமாக கூற முடியது என காங்கிரஸின் மற்றொரு கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத், ஜனார்த்தன் திவேதி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்திக்கு -ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் உள்ளிட்ட சிலர் ராகுல் அணியினரின் செயல்பாடே தோல்விக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர். மக்களின் உண்மையான மனநிலையை ராகுலுக்கு கூற அவரது ஆலோசகர்கள் தவறிவிட்டதாகவும் புகார் -கூறியுள்ளனர். 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தலுக்கான பிரச்சாரத் திட்டங்களை வகுத்ததில் முக்கிய பங்காற்றிய ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்களே ராகுல் காந்தியை பார்ப்பதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ராகுல் அணியினர் மீது பல்வே-று குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டு வருவதால் காங்கிரஸ் கட்சியில் பல அதிரடி மாறுதல்கள் விரைவில் உருவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன,.dinakaran.com

கருத்துகள் இல்லை: