சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல் நலம்
பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
தற்போது அவரது மகள் கனிமொழிக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் தயாளு அம்மாளுக்கு திடீரென உடம்பில் நீர்ச்சத்து
குறைந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்குப்
பின்னர் அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் கனிமொழிக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று பிற்பகலில் அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. கனிமொழிக்கு என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக