வியாழன், 22 மே, 2014

அரசு ஊழியர்களிடம் தி.மு.க., செல்வாக்கு சரிவு

அரசு ஊழியர்களிடமும், தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்து வருவது, தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,விற்கு செல்வாக்கு அதிகம். காலம் காலமாக இதுதான் யதார்த்தமாக இருந்து வந்தது. ஆனால், அது தற்போதைய தேர்தல் மூலம் உடைக்கப்பட்டிருக்கிறது.அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சி மாறி, மாறி வந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், பெரும்பாலானோர் தி.மு.க., ஆதரவாளர்களாக இருந்து வந்தனர். போலீசாரில் அ.தி.மு.க., விற்கு ஆதரவு அதிகம். சமீப காலமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,வின் செல்வாக்கு, வேகமாக சரிந்து வருகிறது. அவர்களின் ஓட்டு வங்கியை, அ.தி.மு.க., சத்தமின்றி கைப்பற்றி வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் ஓட்டு யாருக்கு போகிறது என்பதை, தபால் ஓட்டுகள் மூலம் அறிய முடிகிறது. 
இத்தனைக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மத்தி்ய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் வழங்க ஆணையிட்டது தி்முக அரசுதான் மேலும் பொதுமக்களின் விமர்சனத்துக்கு உளளான வகையில் ஆசிரியர்களின் சமபளம் உயர்த்தி்யது தி்முக சங்க பிரதி்நிதி்களை மதி்த்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்த அரசு தி்முக ஆனால் இதற்கு நேர் மாறாக ஒரே கையெழத்தி்ல் ஒட்டு மொத்த அரசு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தது ஆயிஅதி்முக அரசு புதி்ய ஓய்வூதி்ய தி்ட்டத்தை கொண்டுவரமாட்டேன் பழைய ஓய்வூதி்ய தி்ட்டமே தொடரும் ஓய்வூதி்யம் பெறுவோர் பேருந்தி்ல் இலவச பயணம் செய்ய ஆணையிடுவேன் என வாக்குறுதி் அளிததுவிட்டு வெற்றி பெற்று முதல்வரானதும் கொடுத்த வாக்குறுதி்க்கு எதி்ராக புதி்ய ஓய்வூதி்யதி்ட்டத்தை கொண்டுவந்து வஞ்சித்து நம்பிக்கை துரோகம் செய்தது அதி்முக அரசு


கடந்த, 2009ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில், தபால் ஓட்டுகளில், 87.2 சதவீதம், தி.மு.க.,விற்கு ஆதரவாக இருந்தது. அ.தி.மு.க., 10.03 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றது. அடுத்து 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் செல்வாக்கு சற்று சரிந்து, அந்த கட்சிக்கு, 73.70 சதவீதம், தபால் ஓட்டுகள் பதிவானது. அ.தி.மு.க., ஓட்டு, 22.46 சதவீதமாக அதிகரித்தது. சமீபத்தில் முடிந்த, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டு வங்கி, கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல், பிற கட்சிகளுக்கும் ஓட்டுகள் கூடுதலாக பதிவாகி உள்ளன. தபால் ஓட்டு தி.மு.க.,விற்குதான் என்ற நிலை, இந்த தேர்தலில் மாறியுள்ளது. இம்முறை, 39 லோக்சபா தொகுதிகளிலும், தி.மு.க.,விற்கு, 27,391 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளது சற்று குறைவாக, அ.தி.மு.க., 23,810 ஓட்டுகளும், பா.ஜ., கூட்டணி, 14,472 ஓட்டுகளும் பெற்றுள்ளன.




தபால் ஓட்டு:

சில தொகுதிகளில், தி.மு.க.,வை விட, அ.தி.மு.க., தபால் ஓட்டுகளை கூடுதலாக பெற்றுள்ளது. அதேபோல், தர்மபுரி, பொள்ளாச்சி, பெரம்பலூர் தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி, அதிக ஓட்டுகளை பெற்று உள்ளது. பா.ஜ., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு அதிக அளவில் தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஆனால், தே.மு.தி.க.,விற்கு குறைவான ஓட்டுகளே பதிவாகி உள்ளன.



'நோட்டா':

அதேபோல், நோட்டாவிற்கும் கணிசமான ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், 5.82 லட்சம் பேர், நோட்டாவிற்கு ஓட்டளித்தனர். தபால் ஓட்டு போட்ட வர்களில், 840 பேர், நோட்டாவிற்கு ஓட்டளித்து உள்ளனர். பொதுமக்கள் ஓட்டுகள் மட்டுமின்றி அரசு ஊழியர் ஓட்டுகளிலும், பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பது, தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: