வெள்ளி, 23 மே, 2014

முற்பிறவியில் கோடாரியால் வெட்டிக் கொன்றவனைக் காட்டிக் கொடுத்த 3 வயது 'சிரிய' குழந்தை


A 3-year-old boy in the Golan Heights region near the border of Syria and Israel said he was murdered with an axe in his previous life. He showed village elders where the murderer buried his body, and sure enough they found a man’s skeleton there. He also showed the elders where the murder weapon was found, and upon digging, they did indeed find an axe there.டமாஸ்கஸ்: சிரியாவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தன்னை முற்பிறவியில் கொலை செய்தவனைக் காட்டிக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை பிறக்கும் போதே தலையில் சிறிய கோடு போன்ற அடையாளத்துடன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் தங்களது முற்பிறவியை நினைவில் கொண்டிருப்பார்கள் என்பது ட்ருஸ் தனி இனக்குழுவின் நம்பிக்கையாம். அதை உண்மையென்று நிரூபிக்கும் விதமாக அந்த சிறுவன் பேசும் வயதை எட்டியவுடன் தனது முற்பிறவி ரகசியங்களை கூறியுள்ளான்.
அதன்படி, முற்பிறவியில் தன்னுடைய பெயர் மற்றும் தான் வசித்த இடத்தைப் பற்றியும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான். மேலும், முற்பிறவியில் ஒருவன் தன்னை கோடாரியால் வெட்டிக் கொன்றதாக அதிர்ச்சித் தகவலைக் கூறிய சிறுவன், தன்னை புதைத்த இடத்தை மக்களுக்கு நேரில் சென்று காட்டியுள்ளான். அங்கிருந்த மக்களிடம் இது தொடர்பாக விசாரித்த போது அச்சிறுவன் குறிப்பிட்ட மனிதன் அங்கு வசித்து வந்ததும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனதும் உறுதி செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவன் காட்டிய இடத்தில் தோண்டிப் பார்த்துள்ளனர். அங்கே ஒரு ஆணின் மண்டை ஓடு மற்றும் கோடாரியும் கண்டெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தன்னைக் கொலை செய்தவனையும் நேரில் அடையாளம் காட்டியுள்ளான் அச்சிறுவன். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொலை குறித்து ஆதாரத்துடன் சிக்கியதால் கொலைகாரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். அதன் தொடர்ச்சியாக கைது செய்யப் பட்ட அக்கொலைக்காரன் சிறையில் அடைக்கப் பட்டான். இந்த சம்பவங்களை ஜெர்மனி நாட்டு தெரப்பிஸ்ட் ஆன டிரட்ஸ் ஹார்டோவிடம் சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார். ஹார்டோ இதை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். அதில் சிறார்கள் குறித்தும் அவர்களின் மறு பிறப்பு குறித்தும் அவர் விளக்கியுள்ளார். இதுகுறித்து ஹார்டோ கூறுகையில், டாக்டர் எலி லாஸ், இதுகுறித்து தனது மரணத்திற்கு முன்பு என்னிடம் கூறினார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை படித்தவர்களில் சிலர் இது கட்டுக்கதை என்றும், சிலர் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
/tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: