வியாழன், 29 மே, 2014

சீமாந்த்ரா தெலுங்கான இடையே எல்லை போராட்டம் ! இனி இந்த இரண்டு பகுதியும் விளங்கிடும் !

தெலுங்கானாவில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால்
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போலாவரம் பல்நோக்கு நீர்பாசனத் திட்டத்திற்காக தெலுங்கானாவைச் சேர்ந்த கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வட்டங்களில் உள்ள கிராமங்களை சீமாந்திராவில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தே தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. முழுஅடைப்பு போராட்டம் பற்றி கருத்து தெரிவித்த அக்கட்சி தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, ஜனநாயக முறையில் தங்களது போராட்டம் நடைபெறுவதாக கூறினார். மேலும் பேசிய அவர் போலாவரம் திட்டம் ஏற்கனவே அரசால் நிராகரிக்கப்பட்ட ஒன்று என்றும் கூறினார். இத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றம் அவர் குறிப்பிட்டார்.


முழுஅடைப்பு போராட்டம் காரணமாக தெலுங்கானாவில் உள்ள 13 மாவட்டங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை சிலர் தடுத்துள்ளனர். ஆட்டோக்களும் குறைந்த அளவிலேயே இயங்குகின்றன. ரயில் போக்-குவரத்தை பொறுத்தமட்டில் எவ்வித பிரச்சனையும் இல்லை. தெலுங்கானாவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முழுஅடைப்புக்கு தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.dinakaran.com

கருத்துகள் இல்லை: