செவ்வாய், 27 மே, 2014

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு 10 நாட்கள் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் வழக்கு தொடர்பான சிவில் விவகாரங்கள் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.< இது தொடர்பாக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதிகள் சவுகான், ஏ.கே.சிக்ரி அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லெக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்றும், அந்த வழக்கு முடியும் வரை சொத்துக் குவிப்பு வழக்கிற்கு தடை விதிக்காவிட்டால் அது பெரிய அளவுக்கு முன்னனுமானங்களுக்கு இட்டுச் செல்லும் என்றும் வாதாடினார்.


சிவில் வழக்கு முடிந்த பின்னரே குற்ற வழக்கு விசாரிக்கப்படவேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு 10 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டனர்

மேலும், இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சில சொத்துக்களை ஒப்படைக்ககோரி லெக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: