போலீஸ் விசாரணைக்கு
அழைத்து செல்லப்பட்ட குன்னம் வாலிபர் மர்மான முறையில் இறந்த வழக்கில் மதுரை
உதவி கமிஷனர், திருச்சி இமிகிரேசன் எஸ்ஐ உள்பட 2 பேரை சிபிஐ அதிகாரிகள் 19
ஆண்டுகளுக்குப்பின் கைது செய்தனர்.பெரம்பலூர் மாவட்டம்
குன்னத்தில் மோகன் என்பவரின் அரிசி ஆலையில் அந்தூரை சேர்ந்த பாண் டியன்
என்பவர் வேலை செய்து வந்தார். மோகனின் மகள் செல்வராணிக்கும், பாண்டியனின்
தம்பி செல்லதுரைக்கும் காதல் ஏற்பட்டது.இவர்களின் காதலுக்கு
பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த 1994, ஆகஸ்ட்
மாதம் வீட் டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றனர். இதுகுறித்து மோகன்,
குன்னம் போலீசில் புகார் அளித்தார். அப்போது பாடாலூர் போலீஸ் நிலையத்தில்
இன்ஸ்பெக்டராக இருந்தவர் காந்தி. இவர் கூடுதலாக குன்னம் போலீஸ்
நிலையத்தையும் கவனித்து வந்த நிலையில் மாயமான இருவரையும் போலீசார் தேடி
வந்தனர்.
இதற்கிடையில் மோகன், கடந்த 1995ல் சென்னை உயர்நீதிமன்றத் தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், அப் போதைய இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. தனிப்படையில், குன்னம் போலீசார் ரவி, சின்னதுரை, அன்பரசன் ஆகியோர் இருந்தனர். விசாரணையில் காதல் ஜோடி சென்னையில் பதுங்கி இருப்பதாகவும், அந்த இடம் பாண்டியனு க்கு தெரியும் என்றும் தக வலை கிடைத்தது.
இதையடுத்து இரவில் பாண்டியன் வீட்டுக்கு தனிப்படை போலீசார் சென்றனர். வீட் டில் இருந்த பாண்டியனை போலீசார் விசாரணைக் காக அழைத்து சென்றனர். மறுநாள் காலை பாண்டி யன், கோவிந்தராஜபட்டினம் ஓடை அருகே மரத் தில் தூக்கில் பிணமாக தொங்கினார். பாண்டியன் சாவில் மர்மம் இருப்பதாக ஊர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதை அடுத்து அவரது மனைவி அஞ்சலை, தனது கணவன் பாண்டியனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக புகார் அளித் தார். இந்த வழக்கு கீழ் கோர்ட்டுகளில் விடுதலையானது.
இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் காந்தி, காவலர் ரவி ஆகியோர் பதவி உயர்வு பெற்ற சென்று விட்டனர். தற்போது காந்தி மதுரை காவல் கட்டுப் பாட்டு அறையில் உதவி கமிஷனராகவும், ரவி, திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேசன் பிரி வில் சப்இன்ஸ்பெக்டராக வும் உள்ளனர்.
இதற்கிடையில் அஞ்சலை, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2013ல் மனு அளித்தார். மனுவை ஏற்று கொண்ட உயர்நீதிமன்றம், விசாரித்து நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணையை சிபிஐ நடத்தி வந்த நிலை யில், பாண்டியன் சாவில் முகாந்திரம் இருப்பதாக கூறி மதுரை காவல் கட்டுப் பாட்டு அறைஉதவி கமிஷ னர் காந்தி, மற்றும் திருச்சி விமான நிலைய இமிகிரேசன் எஸ்ஐ ரவி ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம் மன் அனுப்பியது. இதையடுத்து இருவரும் விசாரணைக்காக சென்னை சென்றனர். அப்போது வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி சிபிஐ, நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் சம்பவம் நடந்த இடம் குன்னம், அப்போது ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்ததால் திருச்சி தலை மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து 2 பேரையும் சிபிஐ அதிகாரிகள் அழைத்து வந்தனர். கார் திருச்சியை நெருங்கிய போது, உதவி கமிஷனர் காந்தி, திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி துடித்தார். இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உதவி கமிஷனர் காந்தி அனுமதிக்கப்பட் டார்.
பின்னர் சிபிஐ அதிகாரிகள், ரவியை திருச்சி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பாலசந்திரன், ஜூன் 9ம் தேதி ரவியை காவலில் வைக்க உத்தரவிட் டார். இதையடுத்து ரவி மத் திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காந்தியையும் ஜுன் 9ம் தேதித வரை காவ லில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அவ ருக்கு துப்பாக் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
உதவி கமிஷனர் காந்தி திருச்சி கன்டோன்மென்ட், பொன்மலையில் உதவிகமிஷனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக