டெல்லி: மோடியின் அமைச்சரவையில் அருண் ஜேட்லிக்கு நிதி அமைச்சகம்,
ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை, சுஷ்மா ஸ்வராஜுக்கு வெளியுறவுத் துறை
அமைச்சகம் வழங்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
மோடி இன்று மாலை பிரதமராக பதவியேற்கிறார். அவருடன் 24 கேபினட் அமைச்சர்கள்
மற்றும் 21 இணை அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. யார்,
யாருக்கு எந்தெந்த அமைச்சகங்கள் அளிப்பது என்பது குறித்து மோடி பாஜக தலைவர்
ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் மோடியின் அமைச்சரவையில் யார், யார் இடம்பெறுகிறார்கள் என்ற
தகவல் கிடைத்துள்ளது.
அதன் விவரம் வருமாறு,
1. ராஜ்நாத் சிங்
2. அருண் ஜேட்லி
3. நிதின் கட்காரி
4. சுஷ்மா ஸ்வராஜ்
5. வெங்கையா நாயுடு
6. சதானந்த கவுடா
7. உமா பாரதி
8. நஜ்மா ஹெப்துல்லா
9. கோபிநாத் முண்டே
10. ராம்விலாஸ் பாஸ்வான்
11. கல்ராஜ் மிஸ்ரா
12. மேனகா காந்தி
13. அனந்த் குமார்
14. ரவி சங்கர் பிரசாத்
15. அசோக் கஜபதி ராஜு
16. அனந்த் கீதே
17. ஹர்சிம்ரத் கவுர் பாதல்
18. நரேந்திர சிங் தோமார்
19. ஜுவல் ஓரம்
20. ராதா மோகன் சிங்
21. தவார் சந்த் கெஹ்லாட்
22. ஸ்மிரிதி இரானி
23. டாக்டர் ஹர்ஷ்வர்தன்
24.
இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)
சர்பானந்தா சோனோவல்
சந்தோஷ் குமார் கங்வார்
ஸ்ரீபத் நாயக்
ராவ் இந்தர்ஜீத் சிங்
பிரகாஷ் ஜாவேத்கர்
ஜெனரல் வி.கே. சிங்
பியூஷ் கோயல்
நிர்மலா சீதாராமன்
இணை அமைச்சர்கள்
தர்மேந்திர பிரதான்
டாக்டர். ஜித்திரேந்திர சிங்
ஜி.எம். சித்தேஸ்வரா
மனோஜ் சின்ஹா
உபேந்திர குஸ்வாஹா
பொன். ராதாகிருஷ்ணன்
கிரண் ரிஜ்ஜு
க்ரிஷன் பால் குஜ்ஜார்
சஞ்சிவ் பாலியன்
மன்சுக்பாய் தன்ஜித்பாய் வசவா
ராவ்சாகேப் தாதாராவ் பாட்டில் தன்வே
விஷ்ணுதேவ் சஹாய்
சுதர்ஷன் பகத்
நரேந்திர மோடி (பாதுகாப்புத் துறை)
மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு
அமைச்சரவையில் இடம் இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள்
தலைவர் ந்ரிபேந்திர மிஷ்ரா மோடியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்படுவார்
என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாஜக எம்பிக்களில் 12 எம்.பி.க்களுக்கு ஒரு
கேபினட் அமைச்சர் நியமிக்கப்படுகிறார். சிவசேனா இரண்டு கேபினட் மற்றும்
இரண்டு இணை அமைச்சர்கள் பதவி கேட்டது. ஆனால் அதற்கு ஒரு கேபினட் அமைச்சர்
பதவியும், ஒரு இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பாஜக தலைவர்
ராஜ்நாத் சிங்கை சந்தித்து தங்கள் கட்சிக்கு 3 கேபினட் அமைச்சர் பதவி
கேட்டார். ஆனால் அவர் கட்சிக்கு ஒரு கேபினட் அமைச்சர் பதவி மற்றும் ஒரு
இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in/
tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக