சென்னை: காங்கிரஸ் மீது நாடு முழுவதும் மக்கள் கோபமாக இருந்ததை புரிந்து
கொள்ளாமல் விட்டுவிட்டோம். இதில் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும்.
மக்களின் கோபத்தை புரிந்து கொண்டு, கோபத்தை போக்க தேவையான நடவடிக்கைகளை
ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் எடுக்க வேண்டும் என்று புதிதாக
தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியா காந்தி
ஆவேசமாக பேசினார். காங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில்
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா
காந்தி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராக ஒருமனதாக தேர்வு
செய்யப்பட்டார்.ராகுல் என்னைக்கு தலை தூக்கினரோ அன்னைக்கு பிடிச்சது ம்ம்ம் ஸ்டாலின் என்னைக்கு தலையானரோ அன்னைக்கு பிடிச்சது ம்ம்ம் நீங்க கேக்கல கேக்க மாட்டீங்க ?
பிறகு சோனியா பேசியதாவது: இந்தியாவில் பெருவாரியான மக்களிடையே காங்கிரஸ் மீது கோபமும், எதிர்ப்பும் இருந்திருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த அளவுக்கு காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த கோபத்தை தேர்தலுக்கு முன்பு புரிந்து கொள்ள தவறி விட்டோம். தேர்தல் தோல்வியில் இருந்து நாம் பாடம் கற்று கொள்ள வேண்டும். மக்களின் கோபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து, அதை போக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட முறை யிலும், ஒட்டு மொத்தமாகவும், இந்த பின்னவடைவில் இருந்து பாடம் கற்க வேண்டும். மக்கள் மத்தியில் இந்த கோபமும் எதிர்ப்பும் எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து அதை சரி செய்தவதற்கான பணிகளை செய்ய வேண்டும்.
மக்களவையில் நமது பலம் குறைந்திருக்கலாம். ஆனால் மாநிலங்களவையில் இன்னமும் நாம்தான் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறோம். சரியான எதிர்க்கட்சியாக அங்கு நம்மால் செயல்பட முடியும். இணக்கமான கட்சிகளுடன் இணைந்து நாம் பணியாற்ற வேண்டும். கடந்த நாட்களில் நாடாளுமன்றத்தில் நாம் ஒவ்வொரு முறை மசோதாக்கள், திட்டங்கள் கொண்டு வரும் போதும் அதை பா.ஜவினர் எந்த குறிக்கோளும் இல்லாமல் தடுத்தனர். எதையும் நடைமுறைபடுத்த விடாமல் தடுத்தனர். சந்தர்ப்பவாத சக்திகளாகவே அவர்கள் செயல்பட்டனர்.
ராகுல் காந்தி ஊழல் எதிர்ப்பு மசோதா கொண்ட வந்த போதும் இப்படித்தான் நடந்து கொண்டனர். அத்தகைய மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் இன்னும் அப்படியே இருக்கின்றன. அந்த மசோதாக்களின் மீது பா.ஜ அரசு எத்தகைய அணுகுமுறையை பின்பற்றுகிறது என்பதை நாம் கண்காணிக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜவுக்கு 17.16 கோடி வாக்குகள் கிடைத்துள்ளது. காங்கிரஸ் 10.69 கோடி வாக்குகள் பெற்றுள்ளது. அதாவது பா.ஜ பெற்ற ஒட்டுமொத்த ஓட்டில் 69 சதவீத வாக்குகள் நாம் பெற்றிருக்கிறோம். இந்தியாவை எப்படி உருவாக்க வேண்டும் என்ற நமது எண்ணத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் இவ்வளவு கோடி மக்கள் நமக்கு வாக்களித்திருப்பது திருப்தி அளிக்கிறது. இவ்வாறு சோனியா காந்தி பேசினார். கூட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் சிறப்பாக செயல்பட்ட மன்மோகன் சிங்குக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூட்டம் நடந்த மைய மண்டபத்தின் கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்து இருந்தார் dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக