செய்தி: மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டு அறிவித்த முதல்
நடவடிக்கைகளில் ஒன்றாக, கோரக்தாம் விரைவுவண்டி விபத்தில் இறந்தவர்களுக்கு 2
இலட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக
வழங்குமாறு உத்திரவிட்டார்.
நீதி: மக்களிடம் நிலவிய காங்கிரசு வெறுப்பினால் விபத்து போல வெற்றிபெற்றவர், ஒரு ரயில் விபத்திற்கு நிவாரணம் வழங்கியது தற்செயலானதுதான். ஆனாலும் முதலிலேயே இப்படி ஒரு துக்க அறிவிப்பு வருவது இந்து மத தருமத்தின்படி ஏதோ ஒன்றின் கெட்ட சகுன அறிகுறியில்லையா?
செய்தி: பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடியின் அலுவலகத்தின் தலைவராக, பிரதமர் அலுவலக முதன்மை செயலராக, உ.பி.,யை சேர்ந்த நிர்பேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதி: ஹார்வர்டில் படித்துள்ளதால் அமெரிக்க விசுவாசமும், டிராய் ஆணையத்தில் தலைவராக பணியாற்றியுள்ளதால் முதலாளித்துவ அடிமைத்தனமும் கொண்ட மிஸ்ரா, தெரிவு செய்யப்படவில்லை என்றால்தான் அது செய்தி.
செய்தி: மோடி தலைமையிலான அரசு பத்திரிகை சுதந்திரத்திற்கு உறுதி அளிப்பதாக இருக்கும், அரசை விமர்சிக்க சுதந்திரம் அளிப்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது, என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில் மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
நீதி: மோடியை இணையத்தில் விமரிசத்தார்கள் என்று கோவாவிலும், பெங்களூருவிலும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மேற்கண்ட அறிவிப்புக்கு முன் நடந்தது என்று யாராவது நிம்மதியடைய முடியுமா?
செய்தி: “மோடி பிரதமராக பதவியேற்றதும் பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சு நடத்துவதாக அறிவித்திருந்தாலும், பாகிஸ்தானை நம்ப முடியாது. ஆனாலும், மோடி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான் வழிக்கு வராவிட்டால் அணு குண்டு பட்டனை மோடி அழுத்துவார்.” – சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
நீதி: பதிலுக்கு பாகிஸ்தான் என்ன தீபாவளி வாணமா விடும்? அவர்களிடமும் அணுகுண்டு இருக்கிறது, பட்டன் உண்டு என்பது கூட இந்த முட்டாளுக்கு தெரியவில்லை. பொதுஅறிவு இல்லை என்பதாலேயே மதவெறியின் மகத்துவம் ஒளிரும் போல.
செய்தி: மைத்துனருக்கு பதவி கிடைக்காத பட்சத்தில், மனைவிக்காவது பதவியை பெற்று, கட்சியை காப்பாற்றும் நோக்குடன் விஜயகாந்த் டில்லி சென்றுள்ளார்.
நீதி: மட்டன் கடையைச் சுற்றி வரும் எல்லா தெருவோர பைரவர்களுக்கும் ஃபிரீ கறி கிடைத்து விடாது கேப்டன்!
செய்தி: சி.பி.ஐ வழக்கு நிலுவையில் இருப்பதால் பா.ம.க.,வின் அன்புமணிக்கு அமைச்சர் பதவி அளிக்க பா.ஜனதா முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நீதி: முசாஃபர் நகர் இந்து மதவெறியனும் விலங்கு கால்நடை மருத்துவருமான பல்யானுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் போது தருமபுரி வன்னிய சாதிவெறியனும் மனித கால்நடை மருத்துவருமான அன்புமணிக்கு கொடுத்தால் என்னடா குத்தம்.
செய்தி: இந்திய அரசியல் மாற்றங்கள் குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பிரெஞ்சு அறிஞர் நாஸ்ட்ரடாமஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்திய அரசியலில் 21-ம் நூற்றாண்டில் பெரும் மாற்றம் நிகழும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி என்ற நபர்களால் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெறும். வாஜ்பாய் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்க மாட்டார். அத்வானி, கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பார். நரேந்திர மோடி நீண்ட நாட்கள் பதவியில் இருப்பார். சிறந்த இரும்பு மனிதரான அவர், தன் சாதனைகளை எடுத்துக் கூறி மக்களின் மனதில் இடம் பிடிப்பார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார் – தினமலர் செய்தி.
நீதி: ஆமாம், நாங்களும் அந்த புத்தகத்தை படித்திருக்கிறோம், அதில் அந்துமணியின் பாலியல் பொறுக்கித்தனங்களைக்கூட நாள்வாரியாக, நேரக்கணக்காக அட்சர சுத்தமாக குறிப்பிட்டிருக்கிறார், நாஸ்ட்ரடாமஸ். ஜெய் ஹிந்த்!
vinavu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக