வியாழன், 29 மே, 2014

1,200 ஆண்டுகளுக்கு முந்தைய tablet Computer போன்ற பொருள் துருக்கியில் கிடைத்துள்ளது

துருக்கியை சேர்ந்த தொல் பொருள் ஆய்வாளர்கள் 1200 ஆண்டுகளுக்கு
முந்தய மரத்தாலான ஒரு பொருளை கண்டறிந்துள்ளனர். இது டேபிளட் கம்யூட்டருக்கு இணையான பழைய பொருளாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகர் அருகே உள்ள யேனிகாபி பகுதியில்,தோண்டி எடுக்கப்பட்ட பழமையான 37 கப்பல் சிதைவுகளில்  ஒன்றில் இருந்து  இந்த பொருள்  கண்டறியப்பட்டுள்ளது. நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தியோடோசியஸ் துறைமுகம்,  பைசண்டைன் பேரரசர் ஆட்சிக் காலத்தில்  இது நகரின் முக்கியமான வணிகதுறைமுகமாகவும் விளங்கி வந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து தற்போது கண்டறியப்பட்ட இந்த மரத்திலான பொருளானது, மரச்சட்டங்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அளவு  ”7 இன்ச்”கள் கொண்டதாகவும் நவீன டேபிளட் கம்யூட்டர் போன்று காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் திண்ணமாக காணப்படுகிறது. உத்தேசமாக இதை கப்பல் கேப்டன் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


செவ்வக வடிவில் இதன் மரச்சட்டம்(பேனல்) அமைந்துள்ளது. மெழுகு பொருட்களூம் அதில் பூசப்பட்டுள்ளது. இதன் பேனல்களின் கிரேக்க மொழியில் எழுதவும் பட்டிருக்கிறது.  இந்த தகவலை இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தின் கடல் தொல்லியல் ஆய்வு துறையின் இயக்குநர் தயாரித்த ஒரு ஆய்வு திட்டத்தில் இதை தெரிவித்தாக ஹூரியத் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

3 கருத்துகள்:

suresh சொன்னது…

superappu

சுரேஷ் சொன்னது…

superappu சூப்பர்

suresh சொன்னது…

சூப்பர்