நக்கீரன் :இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன.
இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுவந்த நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் 10 லட்சம் பேரில் 0.61 பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக நோய்த் தடுப்புக்குப் பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டவர்களுக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், அது இரத்தம் உறைதலுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும், அவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் எங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ அந்த மையத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இருபது நாட்களுக்குள் கீழ்கண்ட அறிகுறிகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
செவ்வாய், 8 ஜூன், 2021
இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே தெரிவிக்கவும்" - கோவிஷீல்ட் பயனர்களுக்கு இந்திய அரசு வேண்டுகோள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக