Karthick Ramasamy : தீவிரவாத இயக்கங்களின் பெயரால் வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.
பெரியார் நேசன் : புலிகள் அரசியல, திமுக,விற்கு ஈழ மக்கள் மீது இருக்கும் சாஃப்ட் கார்ணர் வைத்து இந்த ஆட்சியில் இவர்கள் வளர்த்திட முயற்சி செய்வாங்கனு தோனுது...மறுபடியும் புலிகள் பர்னிச்சர எடுத்து ஒரு ரவுண்ட் விட்டாதான் சரியாகும்போல
செல்லபுரம் வள்ளியம்மை :ஏராளமான திமுகவினருக்கு இன்னும் புலிகள் மீது ஈர்ப்பு இருக்கிறது
இது ஒரு பாசிஸத்தின் மீதான ஒரு மயக்கம்
கலைஞரை தவிர எல்லா கட்சிகளும் தலைவர்களும் இயக்கங்களும் ஊடகங்களும் புலிகளின் அத்தனை சகோதர படுகொலைகளையும் ஆதரித்து போர்க்குற்றம் புரிந்தவர்கள்தான்
இதன் நீட்சியாக புலிகளால் படுகொலை செய்யப்பட அத்தனை போராளிகளையும் தலைவர்களையும் கூட துரோகிகள் என்று உரத்த குரலில் முப்பது வருடங்களாக கட்டமைத்த மோசடி தமிழ் நாட்டிலும் நடந்தது
மனசாட்சியை மொத்தமாக தமிழ்நாடே மறந்துவிட்டது என்பது ஒரு சோகமான கசப்பான உண்மை.
புலிகளின் கொலைவெறியாட்டத்தை ரசித்து ரசித்து கொண்டாடியதன் விளைவுதான் தமிழ்தேசிய போர்வையில் விளைந்திருக்கும் பாசிசம்
இதில் இருந்து விடுபடுவதற்கு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது
அதாவது ஈழ மக்கள் மீது சேறு பூசி ஒன்றும் ஆகாது
நடந்த அக்கிரமங்களை மக்களுக்கு புரியும் படியாக எடுத்து செல்லுங்கள்
அதற்கு நீங்கள் முதலில் அவற்றை அறிந்து கொள்ளுங்கள்
எல்லா அக்கிரமங்களையும் குற்றங்களையும் அப்பாவி ஈழமக்கள் மீது போட்டுவிட்டு தப்பி விடலாம் என்று கருதினால் அது மேலும் மேலும் தவறுகளுக்கு வழிவகுக்கும்
இதற்கு முதல் படியாக புலிகளின் கொலைகளை ஊக்குவித்து அதில் திரில் சுகம் கண்ட போர்குற்றவாளிகள் முதலில் மக்களிடம் பொது மன்னிப்பவது கேட்கவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக