புதன், 9 ஜூன், 2021

கனடா 4 முஸ்லிம்களை.. வெறி கொண்டு லாரி ஏற்றி கொன்ற 20 வயது இளைஞர்.. 9 வயது சிறுவன் உயிர் ஊசல்.. அதிர்ச்சி

 Hemavandhana - tamil.oneindia.com : ஒட்டாவா: இஸ்லாமியர்கள் என்பதால் வெறியாகி, 4 பேரை லாரி ஏற்றி கொன்றே விட்டனர்.. இப்படி ஒரு சம்பவம் கனடாவில் நடந்துள்ளது.
கனடா நாட்டின் ஆண்டரினோ மாகாணம், ஹைட் பார்க் சாலை பகுதியில், இரவு 8.40 மணிக்கு, 5 பேர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்..
இவர்கள் 5 பேருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்..
அப்போது, அந்த ரோட்டில் ஒரு லாரி வேகமாக வந்து இவர்கள் அனைவர் மீதும் கண்மூடித்தனமாக மோதியது.
அந்த குடும்பத்தை சேர்ந்த 74, மற்றும் 44 வயது பெண்கள், 46 வயது ஆண் மற்றும் 15 வயது சிறுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர்.


9 வயது சிறுவன் உயிருக்கு போராடி கதறி கொண்டிருந்தான்.. அவனை அங்கிருந்தோர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்...

லாரியை ஏற்றி கொன்றுவிட்ட அந்த நபர், அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்... ஆனால் போலீசார் அவனை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஒரு காம்ப்ளக்ஸில் அந்த 20 வயது இளைஞர் பதுங்கியிருந்தான்.அவனை கைது செய்த போலீசார் விசாரணையும் துவக்கினர்

அப்போது தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எல்லாருமே இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள், மதத்தின் காரணமாகவே வெறுப்புணர்வுடன் அந்த குடும்பத்தினர் மீது லாரி ஏற்றி கொன்றதாக அந்த இளைஞர் வாக்குமூலம் தந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய ட்வீட்டில், "கனடா - லண்டனில் ஒரு முஸ்லிம் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த குடும்பம் கொல்லப்பட்டதை அறிந்து வருத்தப்படுகிறேன்.
பயங்கரவாதத்தின் இந்த கண்டிக்கத்தக்க செயல் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து வரும் இஸ்லாமியர்கள் பற்றிய பயத்தை வெளிப்படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்...
கனடாவில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், போலீசார் இதன் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: