சனி, 12 ஜூன், 2021

வடலூர் வள்ளலார் அனைத்துலக மையம் உருவாக்கப்படும் .. அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு

Velmurugan P - /tamil.oneindia.com  கடலூர் மாவட்டம் வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் அனைத்துலக மையமாக அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுடன் சென்று முதற்கட்ட ஆய்வு செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் பெயரிலான சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று திமுக அரசு ஆட்சிக்கு வரும் முன் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதற்கான செயல் வடிவங்களை தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடங்கி உள்ளது.
வடலூரில் வள்ளலார் பெயரிலான சர்வதேச மையம் அமைக்கப்பட்டால் மிகப்பெரிய அளவில் கடலூர் மாவட்டத்திற்கு பலன் அளிக்கும் என்பதால் இத்திட்டம் குறித்து அதிக எதிர்பார்ப்பு உள்ளது


இந்நிலையில் ஒவ்வொரு கோயிலாக சென்று ஆய்வு செய்து வரும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வடலூர் சென்றார் அங்கு அமைந்துள்ள அருட்பிரகாச வள்ளலாளர் தெய்வ நிலையத்தை வேளான் அமைச்சர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து ஆய்வு செய்தார்.

வாக்குறுதி அந்த இடத்தில் 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த உலகத்தரத்திலான வள்ளலார் சர்வதேச மையத்தினை உருவாக்குவதற்குத் தேவையான திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாக விரிவான கள ஆய்வை மேற்கொண்டார்.

குமகுருவும் ஆய்வு வள்ளலாளர் சத்திய ஞானசபையில் உள்ள தர்மசாலை, அணையாடுப்பு, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகம் ஆகிய இடங்களை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு, மற்றும் அமைச்சர் பன்னீர்செல்வத்துடன் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வள்ளலார் அவர்களின் நினைவை கூறுகின்ற அணையா விளக்கும், பசி என்று வருவோருக்கு பசி தீர்க்கின்ற மாமருந்தாக இருக்கக்கூடிய இந்த இடம் இது. அமைதி வேண்டி வருபவர்களும், ஒழுக்கத்தில் உயர்ந்து ஒம்பப்படுபவர்களும் பேணிகாக்கின்ற வகையில் இந்த சர்வதேச மையம் , வள்ளலார் திருப்பெயரிலே அமைய இருக்கின்றது

ஸ்டாலின் முடிவு செய்வார் வடலூர் சத்திய ஞானசபை சர்வதேச மையம் அமைப்பது குறித்து இன்று அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுடன் ,ஆய்வு மேற்கொண்டேன். இதற்காக இண்டர்நேஷனல் அளவில் வரைபடம் கோரப்பட்டுள்ளது. அது வந்த உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எது சிறந்தது என ஆய்வு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் " என்றார்.

அடிப்படை கட்டமைப்பு வசதி வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் சர்வதேச மையமாக மாறினால் அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெரியஅளவில் அதிகரிக்கும் என்று அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள்.
பாண்டிச்சேரியில் உள்ள ஆரேவில் போல் வள்ளலார் மையமும் மாறும் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு பயணிகள் வந்து தங்கி செல்லும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது. அத்துடன் வள்ளலாரின் பொன்மொழிகள், அவரது வரலாறு, இந்து ஆன்மீகம், வள்ளலாரின் செயல்பாடுகள் கணிணி வடிவில் சுற்றுலா பயணிகளுக்கு திரையிடப்படும் வசதி உருவாக்கப்பட உள்ளது.
இதேபோல் தியானம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அங்கு அமைக்கப்பட உள்ளது. அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்ததை அறிக்கையாக முதல்வர் ஸ்டாலின் அளிப்பார் என்றும் அதன்பிறகு உரிய பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: