Sivakumar Nagarajan : ஊடகங்கள் கண்டு கொள்ளாத அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவு!
பின்னணி என்ன?
"தங்க நகைகள்... . வைரம்... வைடூரியம்.... வெள்ளி பொருட்கள்..... ஐம்பொன் சிலைகள். விலை மதிப்பில்லாத பழங்கால சிலைகள்.!
அரிய வகை பொருட்கள்... அசையும் சொத்துகள்..அசையா சொத்துகள்..
- என இந்து அறநிலையத்துறையின் கீழ் தமிழகமெங்கும் உள்ள கோவில் சொத்துபத்துகளை கணக்கெடுக்கவும்..
அந்த கணக்கெடுப்பில் பல நவீன யுக்திகளை புகுத்தி அந்த சொத்துகள் முழுவதையும் ஆவணப்படுத்த சொல்லி தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்கள் கடந்த வாரம் ஒரு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.... அதை பற்றி தினகரன் செய்தி பத்திரிக்கையை தவிர வேறெதிலும் பெரிதாக செய்தி வரவில்லை..
மற்ற பத்திரிக்கைகளில் வரவில்லை என்பது பெரிய விசயம் இல்லை...
ஏனெனில்...
அதற்கான உத்தரவை கவனித்து படித்தவர்களுக்தான் அந்த உத்தரவின் வீரீயம் புரியும்..
//அந்த உத்தரவின் முழு வீரீயமும் புரிந்ததினால்தான் தினமலர் உள்ளிட்ட பத்திரிக்கைககள் இந்த உத்தரவு குறித்து மூச்சு காட்டவில்லை...
ஆம்...
இந்து கோவில்களுக்கு சொந்தமானதாக கணக்கில் இருக்கும் சொத்துகள்..
இதுவரை கணக்கில் வராத சொத்துகள் என அனைத்தையும் கணக்கெடுக்க சொல்லி உத்தரவிட்டார் அமைச்சர்...
கணக்கெடுக்கும் போதே அனைத்துவிதமான சொத்து விவரங்களையும்...
பக்கவாக ஆவணப்படுத்தி அதை இந்து அறநிலைய துறையின் ப்ரத்யேக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய சொல்லி இருக்கிறார்...
கணக்கெடுத்து பதிவேற்றம் செய்த அந்த சொத்து விவரங்களை இணையத்தில் வெளியிட்டு அந்த சொத்து விவரங்களை பொதுமக்கள் எப்போதும் அறிந்துகொள்ளும்படி செய்யுமாறு உத்தரவிட்டார்..
இதன் மூலம் இத்தனை காலமும் நாம் தினசரி பார்த்து வந்த... கடைகள் ... ஹோட்டல்கள்.. வர்த்தக நிறுவனங்கள் ... ஆக இயங்கி வரும் இந்த இடங்கள் எல்லாம் கோவில் சொத்துகள்தான் என்பது அப்போதுதான் மக்களுக்கு தெரிய வரும் என்பதும்......
ஒருவேளை இன்னும் ஏதாவது சொத்துகள் இந்த கணக்கெடுப்பில் விடுபட்டு போயிருந்து அது பொதுமக்களுக்கு தெரிய வந்திருந்தால் அந்த சொத்துகள் குறித்தும் அரசுக்கு தெரியப்படுத்திட செய்திடலாம் என்கிற ஒரு உத்தரவையும் பிறப்பித்து இருந்தார்..
//இது ஏதோ சொல்வதற்கு எளிதாக இருக்கலாம்...
ஆனால் அந்த உத்தரவை இன்னொரு முறை படிச்சு பாருங்க..//
கோவில் சொத்துகளை கணக்கெடுத்து அதை பதிவேற்றும் இணைய தளம்..
அந்த சொத்துகளை இணைய தளத்தில் ஏற்றுவதற்கு புதிதாக கணிணிகள்..
அந்த சொத்துகளை கணிணியில் ஏற்றும் பணிக்கு தனி அலுவலர்கள்..
அலுவலர்களுக்கு அதில் ஏதேனும் சந்தேகம் வந்தால் அதை தீர்த்து வைக்க மண்டல வாரியாக நிபுணர்கள்...
அவர்களை கண்காணிக்க தனி அதிகாரிகள்...
இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து கண்காணிக்க நெட்வொர்க்....
இணையத்தில் ஏற்றப்பட்டுள்ள விபரங்களில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பவர் குறைந்தது 20% சொத்து ஆவணங்களை தானே நேரடியாய் ஆய்வு செய்திருக்க வேண்டும் என....
ஒரு பக்கா அமைப்பை உருவாக்கம் செய்துதான் ..
கணக்கெடுப்புக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்....
இதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்கய்களை அடித்துள்ளது திமுக அரசு...
இந்து கோவில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும் .....
இந்து கோவில் வருமானம் இந்துக்களுக்கே ...
இந்து கோவில் சொத்துகளை பலரும் ஆக்கிரமித்து உள்ளனர்...
அதை மீட்க வேண்டும்...
-என்பதுதான் நவீன பக்தாஸ்களின் சங்கிகளின் இந்துத்துவா பிரச்சாரமே.....
இதில் முதல் கோரிக்கை இந்து கோவில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும்....
ஆம்...
இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் கீழ் மட்ட பணியாட்கள் முதல் மேல் மட்ட அதிகாரிகள்வரை இந்துவாக இருப்பவர் மட்டுமே அத்துறையில் பணியாற்ற முடியும்...
இன்னும் சொல்ல போனால் இத்துறையில் பணியாற்ற இந்து மதம் சார்ந்தவர் என்கிற சான்று இருந்தால் மட்டும்தான் வேலைக்கே மனு செய்ய முடியும்...
ஆகவே குபீர் பக்தாஸ்களின் இந்து கோவில் இந்துக்களுக்கே என்கிற கோரிக்கையில் அர்த்தமில்லாமல் போனது....
பக்தாஸ்களின் அடுத்த கோரிக்கை கோவில் சொத்துகள் பற்றியது..
அதைத்தான் இப்போது அரசு கையில் எடுத்துள்ளது...
ஆம் ....
மயிலை கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல பெரிய இந்து கோவில்களை சுற்றியுள்ள சொத்துகளையும்... மார்கெட் வேல்யூ அதிகமுள்ள Hot spot இடங்களை எல்லாம் இத்தனை நாள் யார் யார் எப்படி எவ்வளவு நாட்களாக பயன்படுத்தி வந்தார்களோ... அத்தனையும் இந்த கணக்கெடுப்பில் சிக்கி வருகிறது....
💢இதன் விளைவுகளில் ஒரு சிறு துளிதான் சென்னையின் ஹாட் ஸ்பாட் இடமான புகழ் பெற்ற வட பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் நிலம் இத்தனை ஆண்டு காலம் பயன்படுத்தி வந்தவர்களிடமிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது....💢
💢இந்து அறநிலைய துறையின் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கையை ஏன் சில செய்தி பத்திரிக்கைகள் வெளியிடவில்லை என்பது இப்போது புரிகிறதா மக்களே💢
இன்னமும் நிறைய இருக்கு பக்தாஸ் ...
12 ஆண்டுகள் ஆகியும் குட முழுக்கு செய்யாத கோவில்கள் பட்டியலை தயார் செய்ய சொல்லி அமைச்சர் இன்று உத்தரவிட்டிருக்கிறார்...
அந்த கோவில்களுக்கு விரைவில் தமிழ்நாடு அரசே பொறுப்பேற்று கும்பாபிசேகம் செய்ய போகிறது...
கடந்த வாரம் தீயினால் பாதிப்படைந்து சேதாரமான புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை .. அதன் நீண்ட நெடிய பாரம்பரியமும்.. பழமையும் மாறாமல் புனரமைக்க தமிழ்நாடு இந்து அற நிலைய துறை உத்தரவிட்டிருக்கிறது...
இன்னமும் நிறைய செய்ய போறாங்க...
அதுவரை சங்கிகள் @ பக்தாஸ்களான நீங்கள்...
திமுக இந்து விரோதி...
திமுக இந்து விரோதின்னு ...
வழக்கம் போல் கூவிகிட்டே இருங்க.. அப்பதான் பொதுமக்களுக்கு உங்க குபீர் பக்தி வேசம் புரியும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக