battinews.com : இலங்கை – சீன நட்புறவின் ஒரு மைல்கல்; தெற்காசிய மக்கள் சகலருக்கும் பயன்தரக்கூடிய பொலனறுவை சிறுநீரக வைத்தியசாலை
கொழும்பு (சின்ஹுவா) தெற்காசியாவில் மிகவும் பெரியவிசேட சிறுநீரக வைத்தியசாலையை பொலனறுவை நகரில் கடந்த வெள்ளியன்று ஜனாதிபதி கோlட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
இது சீனாவிடமிருந்து கிடைத்த நன்கொடையில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
இந்த புராதன நகரில் சீன – இலங்கை நட்புறவு ந தேசிய சிறுநீரக வைத்தியசாலை திறப்புவிழா வைபவத்தில் நினைவுப்படிகத்தை ராஜபக்ச திரைநீக்கம் செய்துவைத்தார்.
வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதியும் பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ ஷென்கும்ஹொங்கும் கலந்துகொண்டனர்.இந்த வைத்தியசாலை சீன -இலங்கை நட்புறவின் ஒரு சின்னமாகும் என்று குறிப்பிட்ட சீனத்தூதுவர் இதனால் தெற்காசிய மக்கள் சகலரும் பயனடையக்கூடியதாக இருக்கும் என்று சொன்னார்.
கடந்த ஒருசில வருடங்களாக சீனாவும் இலங்கையும் சீனாவும் பல்வேறு நெருக்கடிகளை குறிப்பாக கொவிட் -19 பெருந்தொற்று நோயின் விளைவான சாகாதார தாக்கங்களை சமாளிப்பதற்கு ஒன்று சேர்ந்து பாடுபட்டு இந்த அதிநவீன வைத்தியசாலை நிர்மாணத்தை திட்டமிட்ட நேரத்தில் பூர்த்திசெய்வதில் வெற்றிகண்டிருக்கின்றன என்றும் தூதுவர் கீ சொன்னார்.
2015 ஆம் ஆண்டு சீனாவுக்கு விஜயம் செய்திருந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இத்தகைய சிறுநீரக வைத்தியசாலையை கட்டித்தருமாறு சீன அரசாங்க தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். நிர்மாணம் 30 மாதங்கள் பூரர்த்தியானது.
வைத்தியசாலை 25,000 சதுரமீட்டர்கள் பரப்பளவில் அமைந்திருக்கிறது. 200 பொதுநோயாளிகள் கட்டில்கள்,100 ஹிமோ டயலீசிஸ் கட்டில்கள் மற்றும் 20 தீவிர சிகிச்கை கட்டில்களைக் கொண்டிருக்கிறது.
அதிநவீன ஆய்வுகூடங்களையும் கதிரியக்க மற்றும் சி.ரி.ஸ்கான் சேவைகளையும் பெரிய கேட்போர் கூடத்தையும் கூட கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக