குறைந்த செலவு விமானப்பயணம் என்பது ஒரு மிகப்பெரிய ஏமாற்று!
Poovannan Ganapathy : ·
அஞ்சு ரூபாய் டாக்டரும் நூறு ரூபாய் விமான பயணமும்
சைவ உணவு நல்லது, இந்துக்கள் பெருந்தன்மையானவர்கள் , நேரு நிறைய நல்லவர் ,அரசு படுகொலைகளுக்கு , பெரும்பான்மைவாதத்துக்கு எதிரானவர் என்று பொய்களை உண்மையாக பொதுப்புத்தியில் ஏற்றியது போல ஏற்றப்படும் ஒன்று அஞ்சு ரூபாய் டாக்டர், நூறு ரூபாய் விமானப்பயணம்.
எந்தவொரு சேவைக்கும் ,பொருளுக்கும் ஒரு அடிப்படை விலை உண்டு.அதனைக் குறைவாகக் கொடுத்தால் எங்கோ யாரிடமோ exploitation நடக்கிறது என்று பொருள்.விமான பயணமோ , அறுவை சிகிச்சையோ பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியவை.பல நூறு, ஆயிரம் ஊழியர்கள் தொடர்புடையவை. ஊழியர்களின் ஊதியத்தை வெகுவாக குறைத்து, உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தில் கால்வாசி கொடுத்து , பணி நிரந்தரம் செய்தால் தர வேண்டிய கூடுதல் ஊதியம் ஊதிய உயர்வு,மருத்துவம் , விடுமுறை சார்ந்த சலுகைகளைத் தவிர்க்க , எட்டு மணிநேரத்திற்கு ஊதியம் கொடுத்து விட்டு பதினாறு மணிநேரம் ஊதியம் வாங்க , தொழிற்சங்கம் அமைக்காமல் இருக்கத் தொகுப்பு ஊழியர்களாக வைத்திருந்தால்,பாதுகாப்பு சார்ந்த நடைமுறைகளை வெகுவாக குறைத்தால் தான் குறைந்த விலைக்கு அறுவை சிகிச்சையோ , விமான பயணமோ சாத்தியம்.
குறைந்த செலவு விமானப்பயணம் என்பது ஒரு மிகப்பெரிய ஏமாற்று.பத்து ரூபாய்க்குச் சாப்பாடு போடுகிறோம் என்று நட்டத்தில் பல லட்சம் பேருக்கு சில வாரங்கள் உணவு போட்டு விட்டு , எங்களிடம் இவ்வளவு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்று கணக்குக் காட்டி பல கோடி ரூபாய்க்கு விற்று விட்டு ஓடுவதை, அல்லது கமிஷன் பணத்தை மாற்றப் பல நூறு கோடி ரூபாய்க்கு அஸெட் இல்லாத நிறுவனத்தை விற்பதை பெரும் சாதனையாக முன்னிறுத்துவது இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொடருமோ ?
அரசு மானியம் கொடுத்து மாணவர்கள்,மாற்றுத்திறனாளிகள்,ஊழியர்களுக்கு
விடுமுறைக் கால சுற்றுலா பயணச்சீட்டு என்று தருவதைப் பெரும்பான்மை மக்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையோ, இரு ஆண்டுகளுக்கு ஒருமுறையோ தந்தால் விமானப்பயணம் அனைவர்க்கும் சாத்தியப்படும் .
வெங்காயத்தையோ, அரிசியையோ , அறுவை சிகிச்சையையோ , விமானப்பயணத்தையோ அரசு இலவசமாகத் தரலாம்.தர வேண்டும். ஆனால் ஒரு ரூபாய்க்குத் தனியார் விற்கிறேன் என்றால் அதன் பின்னே ஏமாற்று தான் இருக்க முடியும்.
Veerabahu Muthusubramanian :
கோபிநாத் பிரமணர் சார்.டாக்டர் ஏர் இண்டியால இருக்காரு.
சப்போர்ட் கொஞ்சம் கஷடம்தான்.
இதில் 1994 ல பிஜேபி டிக்கட்ல வேற போட்டி போட்ருக்காறு்
இதல்லாம. சூர்யா அன் டீம் மறச்சுட்டாங்க..
Poovannan Ganapathy :
கோபிநாத் பிராட் சார். ஆனால் பார்ப்பனர் என்பதால் மிகப்பெரும் போராளியாக, சமூக சீர்திருத்தவாதியாக , தொழில்புரட்சியாளராக முன்னிறுத்தப்படுவார். இதற்கு தானே தான் இந்தியாவே உருவாக்கப்பட்டது.இன்றுவரை சிறப்பாக பார்பபனர் புகழ் பாடுவது, பார்ப்பனர் கோலோச்சுவது நடந்து வருகிறது ..
Antony Valan
அதிக கட்டணம் வசூலிக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் எல்லாம் சரியாக இருக்கிறது எந்த முறைகேடுகளும் இல்லை என்று முடிவுக்கு வந்து விடலாமா..
நிறைய பணம் வசூலிக்கிற இடங்களில் தான் தரம் இருக்கும் என்று சொல்ல வருகிறீர்களா...
முறைகேடுகள் ஊழியர்களின் சம்பளம் வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் எல்லா இடங்களிலும் இருக்க வாய்ப்புண்டு. அது குறைவான கட்டணம் வாங்கும் நிறுவனங்களில் என்று மட்டுமல்லாது எல்லா நிறுவனங்களுக்கும் பொதுவானது. கட்டணம் குறைவாக இருந்தால் அது எல்லாமே தவறு என்பது எந்த வகை நியாயம்...
ஐம்பது ரூபாய் நூறு ரூபாய் கட்டணம் வசூலிக்கும் மருத்துவர்கள் சேவையாளர்கள் எல்லாம் தவறானவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா.?
Poovannan Ganapathy :
உலகெங்கும் மருத்துவத்திற்கு, மருந்துகளுக்கு எவ்வளவு செலவாகிறது என்று
பாருங்கள். அரசு மானியம் தந்தால் குறைவாக செலவாகும். அரசே இலவசமாக
நடத்தலாம்.
கியூபா
அரசோ , ஐரோப்பிய நாடுகளின் அரசுகளோ பல்லாயிரம் கோடி செலவு செய்து
மக்களுக்கு இலவசமாக மருத்துவ வசதிகளைத் தருகிறார்கள். அங்கு தனியார்
அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஆகும் செலவோடு ஒப்பிட்டால் நான் சொல்வது
புரியும் சார்.
ஒரு
சி டி ஸ்கேன் எடுக்க மூன்று லட்ச ரூபாய் ஆகும் . அப்பல்லோ ஒரு பைவ்
ஸ்டார் , செல்வேன் ஸ்டார் ஹோட்டல்.அதற்கான clientele வேறு. அங்கு
பணிபுரியும் மருத்துவர்கள் கூட தங்கள் குடும்பத்தினர்களுக்கு அங்கு
மருத்துவம் பார்த்துக்கொள்ள மாட்டார்கள்.மிக அதிக செலவாகும்.
Anbu Muthu Kumar : //அப்பல்லோ ஒரு பைவ் ஸ்டார்//
இதைத் தான் படத்திலும் சொல்லியிருக்காங்க.. அப்பல்லோ தரத்தில் உடுப்பி ஹோட்டல் நடத்த முடியும் என்று..
Karthikeyan Fastura :
//குறைந்த
செலவு விமானப்பயணம் என்பது ஒரு மிகப்பெரிய ஏமாற்று// அது ஒரு
மார்கெட்டிங் strategy. அதன் மூலம் அந்த ரூபாயில் ஒருவன் தன் விமான பயணக்
கனவை நிறைவேற்ற முடிகிறது இல்லையா.. ஜியோ மூன்று மாதம் இன்டர்நெட்
வசதியுடன் இலவசமாக மொபைல் நெட்வொர்க் கொடுத்தான். அதில் என்ன
குறைந்துவிட்டது.
கலைஞர் டிவி கொடுத்தபோது இது பெரும் ஏமாற்று என்று சொன்னவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.
Poovannan Ganapathy : இரண்டுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா ? அரசு இலவசமாக விமான பயணத்தை
பஞ்சாயத்து தலைவர்களுக்கு தரலாம்.மேற்படிப்பு படிக்க செல்லும் மாணவ
மாணவிகளுக்கு,மருத்துவம் செய்து கொள்ள செல்லும் ஏழை நோயாளிகளுக்கு தரலாம்
என்று தான் எழுதி இருக்கிறேன்.
தனியார்
மிக குறைந்த விலையில் தந்து லாபம் பார்க்கிறேன் என்று சொல்வது பொய்,
ஏமாற்று.சாத்தியம் இல்லாதது .ஆயிரம் ரூபாயில் இருபெறூம் கான்க்ரீட் வீடு
கட்டித்தருகிறேன். 250 ரூபாயில் ஆண்ட்ராய்ட் மொபைல் , ஐநூறு ரூபாய்
லேப்டாப் கதைகள் போல தான்..
Anbu Muthu Kumar :ஒரு கூலித் தொழிலாளிக்கு 8 மணி நேர சம்பளம் ₹ 500 என்றால் அதே சம்பளத்தை ஏன் ஒரு மருத்துவருக்கும் கொடுக்க கூடாது..
Poovannan Ganapathy : கண்டிப்பாகத் தோழர் விமானி, பிரதமர், மருத்துவர், கடைநிலை ஊழியர்,
நடிகர்,பாடகர், இசை அமைப்பாளர் , எழுத்தாளர் என எல்லாரும் ஒன்று தான்.
அனைவர்க்கும் அரசு கலவி, மருத்துவம், ஒரே போல இருப்பிடங்கள் , ஒரே அளவு
நிலம் இருக்கும் சூழலை உருவாக்கும் போது ஊதியத்துக்கு மதிப்பு இருக்காது.
Karthikeyan Fastura : வர்த்தகத்தில் வெல்வதற்காக, வளர்ப்பதற்காக விலை மலிவாகவும் அல்லது
இலவசமாகவோ கொடுப்பதில் என்ன பிரச்சனை? அரசாங்கங்கள் செய்யத் தவறிய பல
விஷயங்களை பெரும் தொழில் நிறுவனங்கள் மிக எளிதாக மக்களுக்கு கொண்டு
சேர்த்திருக்கின்றன. ஏர் இந்தியா மட்டும் இருந்தவரை விமான பயணம் என்பது
மேல்தட்டு மக்களுக்கு என்று மட்டுமே இருந்தது என்பது உண்மை தானே.
பிஎஸ்என்எல் இருந்தவரை அடித்தட்டு மக்களுக்கு தொலைபேசி சென்று சேரவில்லை
என்பதும் உண்மைதானே. என்னைப் பொறுத்த வரைக்கும் அரசாங்கமும் ஒரு பெரும்
தொழில் நிறுவனம் தான். அதன் இலவச திட்டங்கள் கூட நீண்ட கால முதலீடுகள் தான்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக