500 வாக்குகள் வித்தியாசத்தில் 23 தொகுதிகள்.
1000 வாக்குகள் வித்தியாசத்தில் 49
2000 வாக்குகள் வித்தியாசத்தில் 86 தொகுதிகள்.
இன்னும் முழு விபரம் கிடைக்கும் போது தெரியும் ..உ.பியை போல இங்கும் உவைசி கூட்டத்தார்
பாஜகவிற்கு வழிவகுத்து தங்களுக்கு கொடுக்கபட்ட "கடமையை" முடித்திருக்கிறார்கள்..
என்ன செய்யவேண்டும் முஸ்லிம்கள் முதலில் உவைசி போன்றவர்களிடமிருந்து காத்துக்கொள்ளவேண்டும் .. வாக்கு பிரிந்தால் பகை வெல்லும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் உவைசி SDPI சேர்ந்தவர்கள் இல்லை எல்லாம் அறிவார்கள் ..அவர்களுக்கு சொகுசுவாழ்க்கை சுகபோகம் சமுதாய நலனெல்லாம் பிறகுதான் .. முதலில் முஸ்லிம் தங்களுக்கான தலைவரை கண்டெத்துங்கள் .. கழிசடைகள் சுயலாபத்திற்காக சொல்பேச்சு கேட்காமல் அரசியல் செய்பவர்கள் ..உண்மையில் இஸ்லாமிய சமுதாய கெட்டதற்கு அவர்களின் அரசியல் புரிதல் இல்லாததே காரணம் .. விடுதலை இந்தியாவில் பலம்பொருந்தியவர்களாக இருந்தவர்கள் இன்று இருக்குமிடம் தெரியாமல் கரைய தொடங்கிவிட்டார்கள் சரியான தலைவனில்லை தங்களின் அரசியல் எதுவென்ற புரிதல் இல்லை தங்களின் எதிரியை வீழ்த்தும் வியூகம் அறிந்திடவில்லை .. காங்கிரஸ் மீது ஏனிந்த கோபம் ..அதனால் தங்களை கருவறுக்க நினைப்போருக்கும் நிரந்தர பகைகொண்டு திரிவோருக்கு மறைமுகமாய் உதவுவது ஏன் ..
..
முதலில் எதிரியை வீழ்த்திவிட்டு தங்கள் பழைய நண்பர்களின் பழிதீர்க்கலாம்.. இருக்க இடத்தை முதலில் தேர்வு செய்திட வேண்டும் .. பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தோடு கைகோர்ந்திருந்தால் பாஜக வெற்றி பெற்றிருக்காது .. ஆர்எஸ்எஸின் செல்லபிள்ளைகள் முஸ்லிம்களின் நிறைய உண்டு காங்கிரஸ் கம்யூனிஸ்ட்களில் ஊடுறுவியதைப்போல முஸ்லிம்களிடமும் தங்கள் செல்ல செவிலிகளை வைத்திருக்கிறார்கள் என்ன இவர்கள் பகிரங்கமாகவே செயல்படுகிறார்கள் .. வாக்கை பிரிந்து என்ன கண்டார்கள் பாஜக வெற்றியை தவிர..
..
இஸ்லாமிய இயக்கங்கள் தலைமை போட்டியில் யார் பெரியவன் என்ற போட்டியில் சமுதாயத்தை பலிகொடுக்கிறார்கள் .. முஸ்லிம்கள் இதை உணரவேண்டும்.. பல்வேறு பிரிவுகளாய் அமைப்பாய் பிரிந்து கிடப்பதால் எதுவும் பலனில்லை.. ஏறக்குறைய இதே காலகட்டத்தில் தொடங்கபட்ட ஆர்எஸ்எஸ் இன்று இந்திய அரசையே இயக்குகிற நிலையில் இருக்கிறது அதே நேரம் வலுவாயிருந்த முஸ்லிம்லீக் இன்று பரிதாபகரம் .. கேரளத்திலும் தமிழகத்தில் சிறியதோதிலும் இருக்கிறார்கள் .. காரணம் பதவி போட்டி அதிகார போர் தானென்ற அகந்தை ..தன்னை முன்னிறுத்தி செயல்படவேண்டுமென்ற பேராசையில்
இஸ்லாமிய தலைவர்கள்..
ஒரு சமுதாயமோ செயலிழந்த நிலையில் ..
இனியேனும் கரையேற முயலுங்கள் ..
வாழ்த்துகள் உவைசி .. ..
ஆலஞ்சியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக