அங்குதான் தேஜஸ்வி களத்தில் நுழைந்தார். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் கல்வியுரிமை என்று பீகார் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை மட்டுமே தனது பிரச்சாரத்தின் அடிநாதமாக ஆக்கிக்கொண்டார். அதிலும் குறிப்பாக 'வேலைவாய்ப்பின்மை' என்ற அவரது பிரச்சாரத்தின் மையப்புள்ளி பீகாரின் பொருளாதாரச் சிக்கல், கொரோனா காலத்து புலம்பெயர்வுச் சிக்கல் என்று அனைத்தையும் உள்ளடக்கி ஆளும் தரப்பை உலுக்கிய வண்ணமிருந்தது.
இவரது பிரச்சாரத்தை திசைத்திருப்ப எதிர்தரப்பு எவ்வளவோ முயன்றும் தேஜஸ்வி சளைக்காமல் இதை மட்டுமே பேசினார். வெறும் இருபது நாட்களில் 247 பொதுக்கூட்டங்களில் பேசினார். ஒரே நாளில் 19 பொதுக்கூட்டங்களில் பேசி தனது தந்தையான தலைவர் லாலுவின் சாதனையை (16) முறியடித்தார். பல இடங்களில் 10-15 நிமிடங்கள்தான் பேசினார். ஆனால் சாமானிய பீகாரிகளின் ஆன்மாவை உள்வாங்கிப் பேசினார். ஏழை எளியோரின் வலிகளை எதிரொலித்துப் பேசினார். வாக்காளர் பட்டியலில் பெரும்பான்மையாக இருந்த இளைஞர்களின் கனவுகளின் குரலாகப் பேசினார்.
உண்மைகள் நிறைந்த தேஜஸ்வியின் கர்ஜனைக்கு முன்பு மோடி என்ற நரி ஊளையிட்ட மதவாதக் கூச்சல் மக்களிடம் எடுபடாமல்போயிற்று. விளைவு? கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40இடங்களில் 39இடங்களை வென்ற பா.ஜ.க அணி நேற்று தேஜஸ்வியிடம் சிக்கி சின்னாபின்னமானது.
இன்றைய சூழலில் ஆர்.எஸ்.எஸ் அடக்குமுறையை எதிர்க்க நினைக்கும் எதிர்கட்சிகளுக்கு, பீகார் தேர்தல் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது. சங்கிகளின் சூழ்ச்சிக்கு பலியாகி தேவையற்ற விடயங்களில் திசைதிரும்பால், கவனம் சிதறாமல் நம் பிரச்சாரத்தை நாமே தீர்மானிக்கவேண்டும் என்பதுதான் அது. We should play the game on our own terms.
நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என்னவென்றால் இந்த கவனம் சிதறாமையைப் பொறுத்தவரை தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் தேஜஸ்விக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் என்பதுதான். அதன் பலனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பார்த்தோம்.
தொடர்ந்து மக்களை நேரடியாக பாதிக்கும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை கையிலெடுத்துப் பேசுகிறார். ஆளுங்கட்சியின் (குறிப்பாக அ.தி.மு.கவின்) ஊழலையும், நிர்வாகச் சீர்கேட்டையும் அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இதுதான் சரியான பாதை.
இதே பாதையில் தி.மு.கவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து சென்றால் இங்கே பார்ப்பன பாசிசம் வீழ்வது உறுதி.
மக்கள் விரோத மனுவாதிகளை, மக்களின் குரலாக ஒலிப்பதன் மூலம் மட்டுமே வீழ்த்தமுடியும். தலைவர் ஸ்டாலின் வீழ்த்துவார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக