வியாழன், 12 நவம்பர், 2020

மாநில எல்லைகளை கடந்த மதவெறியும் ஜாதி வெறியும்

A S
ivakumar
: · ஹைதிராபாத் எம்பி ஆன ஓவைஸி எப்படி பீகாரின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை தேர்ந்தெடுத்து நிற்க முடிகிறது? நிற்பதோடு மட்டுமல்லாமல், எப்படி வெற்றி பெற முடிகிறது? மதம், ஹிந்தி/உருது மொழி, இந்த இரண்டும் தான் சொந்த மாநிலத்தவரை விட இவரை தூக்கிவைத்துக்கொள்ள பீகாரிகளை தூண்டுகிறது. அதே மதத்தின் அடிப்படையில் தான் இங்கே சிலரும் ஓவைஸிக்கு கொடி பிடிக்கின்றனர். அவர்கள் வாதத்தில் எப்படி மூடி மறைக்க நினைத்தாலும் உள்ளிருப்பது மதம் மட்டுமே! ஓவைஸி மட்டுமல்ல, மாயாவதியை எடுத்துக்கொள்ளுங்கள். சொந்த மாநிலத்தில் செல்வாக்கிழந்தாலும், தேர்தல் நடக்கும் எல்லாம் மாநிலங்களிலும் அவர் ஓடிப்போய் நிற்க அவர் சாதி மட்டும் தானா காரணம்?
ஓவைஸியும், மாயாவதியும் தங்களுக்கு சொந்தமில்லாத மாநிலத்திலும் பிரச்சாரம் செய்ய முடியும். இவர்களிருவருக்கும் இவர்களுடைய மதம், சாதி மட்டுமல்லாது ஹிந்தி மொழியும் ஒரு இணைப்பாக தொக்கி நிற்கிறது.
இங்கிருக்கும் தேவநாதன் யாதவோ, திருமாவளவனோ பீகாரில் போய் தேர்தலில் நிற்க முடியுமா? பிரச்சாரம் தான் செய்ய முடியுமா?
இங்கே தான் தமிழ்நாட்டின் அரணாக நம் தமிழ் மொழி விளங்குவதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
ராஜிவ்காந்திக்கு பிறகு தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்ற, மக்களின் உள்ளம் தொட்டு உறவு கொண்ட வடநாட்டு தலைவர்களே இல்லை என்பதே உண்மை.
தமிழ்நாட்டினருடன் உறவுக்கொள்ள ராஜீவுக்கு அவருடைய குடும்ப பாரம்பரியமும், அவருடைய வசீகரமும், பழகும் தன்மையும் போதுமானதாக இருந்தது. ராஜீவ் வசீகரித்த மக்களில் ஒரு 30% மக்களை ராகுல் சென்றடைந்திருக்கலாம்.
மற்ற யாருக்கும் அந்த உள்ளார்ந்த தொடர்பு ஏன் வரமறுக்கிறது?
தமிழ் மொழி மட்டுமே காரணம், அதுவே இம்மாநிலத்தின் காப்பரண்!
100 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தியை வலிந்து ஏன் நம் வாயில் திணிக்க நினைக்கிறார்கள் என்று இப்போது புரிகிறதல்லவா  

கருத்துகள் இல்லை: