தந்தி டிவி :
கடும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கமாக சனிக்கிழமைகளில் இயங்கும் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன.
Facebook Twitter Mail
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகளில், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . சென்னை புனித தாமஸ் மலை உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கக்கூடிய தனியார் பள்ளிகள் நாளை விடுமுறை அறிவித்துள்ளன. வேளச்சேரியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் கழிவறைகள் எல்லாம் பூட்டப்பட்டு இருக்கின்றன. மாணவர்களுக்கு தலா 3 லிட்டர் குடிநீர் கூட வழங்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக