nakkheeran.in - nagendran :
நீண்ட நெடுநாட்களாக அமைதிகாத்த சென்னை காவல்துறை ரவுடியை சுட்டு வீழ்த்தியதின் மூலம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வல்லரசு. இவர் மீது தலைமை செயலக காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் கொலை செய்த எதிர் தரப்பினர் வல்லரசுவை கொலை செய்ய திட்டம் தீட்டியதால் அவர் மாதவரம் ரவுண்டானா அருகே குடியேறியுள்ளார். இந்நிலையில் ரவுடி வல்லரசு ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி மறைந்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
ரவுடி வல்லரசுவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை வியசார்பாடி காவல் உதவி ஆய்வாளர் பவுன்ராஜ்க்கு, கதிர் என்னும் நபர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வல்லரசு கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் பவுன்ராஜ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது அங்கு மறைந்து இருந்த வல்லரசு காவல்துறையினரை தாக்க முற்பட்டதோடு கத்தியால் உதவி ஆய்வாளர் பவுன்ராஜை தலையில் வெட்டியுள்ளார். இதில் உதவி ஆய்வாளர் பவுன்ராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட தற்காப்புக்காக ரவுடி வல்லரசுவை துப்பாக்கியால் சுட துவங்கினர். இதில் வல்லரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து ரவுடி வல்லரசுவின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் காவல்துறை உதவி ஆய்வாளர் பவுன் ராஜும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக