nakkheeran.in - raja@nakkheeran.in :
பள்ளிகளின்
அரசு பொதுத்தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி பெற்ற அரசு உயர் மற்றும்
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, விருது மற்றும்
பள்ளிகளுக்கு மேசைவழங்கும் விழா வேலூர் விஐடி பல்லைக்கழகத்தில் உள்ள
சென்னாரெட்டி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக்கொண்டு பேசிய
விஸ்வநாதன், "விஐடி 16 ஆம் ஆண்டாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை
ஊக்குவிக்கும் பொருட்டு இந்த பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவை
நடத்திவருகிறது.
வேலூர் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை விட அதிகமான அரசு பள்ளிகள் உள்ளன. விஐடி ஸ்டார்ஸ் என்கிற திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் முற்றிலும் கட்டணம் ஏதுமின்றி கல்வி பயில்கிறார்கள். தற்போது இந்த மாணவர்கள் அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள்.
ஒரு நாடு கல்வியில் முன்னேறினால் தான் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் முன்னேற்ற முடியும். வளர்ந்த நாடுகளான ஜப்பான் மற்றும் கொரியாவுடன் நாம் போட்டி போட வேண்டும். முன்னேறிய நாடுகளில் குற்றம் விகிதங்கள் குறைவாக உள்ளன, அதற்கு காரணம் கல்வி.
அரசு மற்றும் தனியார் துறைகளில் மாதம் சம்பளம் வாங்கி வேலை செய்கிறார்கள். ஆனால் மருத்துவம் மற்றும் கல்விதுறையில் இருப்பவர்கள் வேலைக்கு பதிலாக சேவையாக செய்து வருகிறார்கள். பொதுவாகவே அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துக்கொண்டு தான் வருகிறது. இந்த நிலைமை மாற வேண்டுமானால் அரசு பள்ளிகளின் தரத்தை நாம் உயர்த்த வேண்டும். இந்தியாவில் 65 சதவிதம் பேர் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள்.
தற்போது ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. பள்ளி கல்வியில் அக்கறை கொண்டுள்ள அமைச்சர் செங்கோட்டையன் இந்த பற்றாக்குறையை களைய வேண்டும். அரசு பள்ளிகளின் அரத்தை உயர்த்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க போதிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். கல்வியில் கல்லூரிகளில் முறையாக கல்வி பயிலாமல் சான்றிதழ் பெறுகிறார்கள். இதனை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயரவேண்டும்" என்றார்.
மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் பேசும்போது, தமிழகம் உலகளவில் கல்வியில் போட்டி போட வேண்டும். மருத்துவம் மற்றும் பள்ளிக்கல்வி துறையை இலங்கையில் அரசு தான் நடத்திவருகிறது. இந்தியாவிலும் அப்படி அரசாங்கமே ஏற்று கல்வியையும், மருத்துவத்தையும் தரவேண்டும் என பேசினார். மேலும், மாணவர்களுக்கு எளிமையான வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும், பாடம் சொல்லி கொடுப்பதை கடமையாக எண்ணாமல், தெய்வபணியாக எண்ண வேண்டும் என்றார்.
இந்த விழாவில் மாவட்டத்தில் 100 சதவிதம் தேர்ச்சி பெற்ற 69 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விருதும், 5000 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. 22 லட்ச ரூபாய் செலவில் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு மேசை மற்றும் நாற்காலிகளை பல்கலைகழகம் சார்பில் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக