வீரகேசரி :சவுதிஅரேபியாவில் பெண்கள் அணிகின்ற ஆடைகள்
கண்ணியமானவையாகவும், மதிப்பிற்குரியவையாகவும் இருக்கும் பட்சத்தில்
இஸ்லாமிய மார்க்கத்தின் அடையாளங்களான முக்காடு அல்லது கறுப்பு அபாயாவை அணிய
வேண்டிய தேவையில்லை என்று சவுதிஅரேபியாவின் சீர்திருத்த சிந்தனை கொண்ட
முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் அல்-சல்மான் கூறியிருக்கிறார்.
சவுதியின் ஆட்சியதிகாரக் கட்டமைப்பில்
உயர்ந்த நிலைக்கு வந்த பிறகு அவர்,பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமை மற்றும்
பகிரங்கள விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் உரிமை உட்பட பெண்களின்
உரிமைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை எடுத்தார். அவர்களின் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள்
பாரம்பரியமான பழமைவாதப் போக்குடைய நாடாக இருக்கும் சவுதிஅரேபியாவின்
நவீனத்துவம் நோக்கிய புதிய நகர்வின் சான்றுகளாகப் புகழப்படுகின்றன.
இஸ்லாமியச் சட்டத்தில் (ஷரியா)
ஏற்பாடுகுள் மிகவும் தெளிவாகவே இருக்கின்றன. அதாவது ஆண்களைப் போன்று
பெண்களும் கண்ணியமான, மதிப்பிற்குரியதான ஆடைகளை அணியலாம்.
இது குறிப்பாக கறுப்பு அபாயா அல்லது கறுப்பு முக்காடு (நிகாப்) என்று விசேடமாக அர்த்தப்படுத்தலாம்.
தாங்கள் எத்தகைய கண்ணியமான ஆடைகளை அணிய
வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது பெண்களிடமே விடப்படுகிறது என்று கடந்த
ஞாயிற்றுக்கிழமை சி.பி.எஸ் தொலைக்காட்சியில் வெளியான பேட்டியொன்றில்
முடிக்குரிய இளவரசர் கூறியிருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி சர்வதேச
பெண்கள் தினத்தன்று சவுதிஅரேபியாவின் ஜெத்த நகரில் பெண்கள் குழுவொன்று
தங்களுக்குக் கிடைத்துவரும் புதிய சுதந்திரங்களை அனுபவிக்கும் ஒரு
வெளிப்பாடாக வீதியோரத்தில் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தவர்களையும்
பொருட்படுத்தாமல் காலை உடற்பயிற்சிக்குச் சென்றார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக