வெள்ளி, 14 ஜூன், 2019

ஆண்டிமடம் திரு. சா.சிவசுப்ரமணியன் முன்னாள் எம் எல் ஏ.. எம்பி இயற்கை எய்தினார்...

Ambethkar Thangarajஆண்டிமடம் திரு. சா.சிவசுப்ரமணியன்,
தன்னுடைய இளைமைக்காலம் முதல் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டராகப் பணியாற்றி பின்னர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் திரு. சா.சிவசு்பரமணியம்.
1954 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் இண்டர்மீடியேட் வகுப்பில் சோந்த இவர், திராவிடர் கழக உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு டேமைகளில் உரையாற்றத் தொடங்கினார்.
1955 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற திரவிடர் கழகக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயம், வழங்கிய நிகழ்ச்சியில் கலந்தக்கொண்டார். 1960 முதல் 1966 வரை தமிழ்நாடு எங்கும் தந்தை பெரியார் அவர்கள் கலந்துக்கொண்ட கூட்டங்களில் இவரும் தந்தை பெரியாருடன் சுற்றுபபயணம் செய்தவர்.
1966 ஆம் ஆண்டு அரியலூரில் திரவிட கழக மாநாட்டில பொருளாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணிப்புரிந்தார்.


1977 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கிய சிவசுப்ரமணியன் 1972 முதல் 1992 வரை ஆண்டிமடம் கழக ஒன்றிய செயலாளராகவும், 1983 முதல் 1991 ஆம் ஆண்டு வரை ஒருங்கினைந்த திருச்சி மாவட்ட கழக துணை செயலாளராகவும், பணியாற்றி வந்ததோடு, கழக தலைமை செயற்க்குழு உறுப்பினராகவும், வெளி மாநில தொடர்புச் செயலாளராகவும், அரியலூர் மாவட்ட அவைத்தலைவராகவும், பணியாற்றியுள்ளார். இவர் தற்போது தலைமை கழகத்தின் சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர்.
1971 ஆம் ஆண்டில் ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சிவசுப்ரமணியன். 1989-91 ஆண்டுகளில் ஆண்டிமடம் தொகுதி சட்டபேரவை உறுப்பினராகவும், 1988 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேவனூர் ஊராட்சி மன்ற தலைவராக இரண்டு முறையும், இலையூர் கூட்டுறவு வங்கித் தலைவராகவும், திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு உறுப்பினராகவும், பொறுப்பு வகித்தவர் சிவசுப்ரமணியன் அவர்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப்ப பகுதிகளிலும் கழக முன்னாள் தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் பேராசிரியர், கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கழக முன்னனியினரை அழைத்து பொதுக்கூட்டங்கள் நடத்தியவர்
கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டம் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களிலும், கலந்துக்கொண்டு கைதாகி சிறை சென்றவர்.
இத்தகு சிற்பபிக்குறிய திரு. சா.சிவசுப்ரமணியன் அவர்கள் ஆற்றிய கழக பணித்தொண்டிணை பாராட்டிடும் வகையில் தலைமை கழகத்தின் சார்பில் 15.09.2015 ஆம் ஆண்டு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இவருக்கு தலைவர் கலைஞர் அவர்கள் பெரியார் விருது வழங்கப்பட்டது.
திரு.கி.சாமிதுரை திருமதி சா.இராசாம்பாள், இணையருக்கு 10.09.1937 ஆம் ஆண்டு மகனாக பிறந்த திரு சா.சிவசுப்ரமியன் 1966 ஆம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் தேவனூரில் தந்தை பெரியார் தலைமையில் இராஜேஸ்வரி அவர்களை மணந்துக்கொண்டார்.
இவருக்கு எஸ்.எஸ்.சிவசங்கர், எஸ்.எஸ்.சிவக்குமார், ஆகிய இரண்டு ஆண் மக்கள், எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது அரியலூர் மாவட்ட கழக செயலாளராகவும், பணியாற்றி வருகிறார்.


இத்தகு சிறப்புக்குறிய திரு. சா.சிவசுப்ரமணியன் அவர்கள் இன்று 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் இயற்கை எய்தினார்.
நன்றி: Ambethkar Thangaraj

கருத்துகள் இல்லை: