மின்னம்பலம் :
“திமுக
பொருளாளர் துரைமுருகன் மக்களவைத் தேர்தல் நேரத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு
பேட்டி அளித்தார். இயல்பாக கேள்விகளை எதிர் கொண்டவர், ’நீங்க இப்ப
வருத்தத்தில் இருக்கிறதா ஒரு பேச்சு திமுகவுலயே இருக்கே?’ என்ற கேள்விக்கு,
‘ஆமா. நான் வருத்தத்தில் தான் இருக்கேன். என் அண்ணன் கலைஞர் இல்லையேங்குற
வருத்தம். துரை துரைனு என்னை வாய் நிறைய கூப்பிடுவார். அவர ஒரு நாள் நான்
பாக்கப் போகலேன்னா கூட, வீட்டுக்கு போன் அடிச்சுடுவார். இப்ப அந்த போன் மணி
ஒலிப்பதே இல்லை’ என்று சொல்லியிருந்தார் துரைமுருகன். இப்போது அந்த மணி
ஒலிக்கவில்லை என்பதன் அர்த்தம் இப்போதைய தலைவர் ஸ்டாலின் தன்னை எதிலும்
கலந்து பேசுவதே இல்லை என்பதுதான்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தன் மகனுக்காக போராடிப் பெற்ற துரைமுருகன், வருமானவரித்துறை நடவடிக்கைகளால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தார். இந்த ரெய்டு குறித்து ஸ்டாலின் வெளிப்படையாக மேடைகளில் கண்டனம் தெரிவித்தபோதும் தனிப்பட்ட முறையில் தன்னுடன் ஸ்டாலின் வேலூர் விவகாரம் பற்றி அதிக அக்கறை எடுத்து பேசவில்லை என்ற குறை துரைமுருகனுக்கு இருந்தது.
இது மட்டுமல்ல ரெய்டுக்கு பிறகு துரைமுருகன் பற்றி ஸ்டாலினும் ஸ்டாலின் குடும்பத்தினரும் தங்கள் வட்டாரத்தில் பேசிக் கொண்ட சில விஷயங்களும் துரைமுருகன் காதுக்கு சென்றடைந்துள்ளது. துர்கா ஸ்டாலின் தனது வட்டத்தில், ’என் வீட்டுக்காரரு தமிழ்நாடு ஃபுல்லா சுத்தி சுத்தி கடுமையாக உழைக்கிறார். ஆனா வேலூர் ரெய்டு மூலமா இப்படி தேர்தல் நேரத்தில் கட்சிக்கு கெட்ட பேர் ஆயிடுச்சு’ என்று வருத்தப்பட்டுள்ளார்.
இது மட்டுமல்ல ஸ்டாலின் மருமகன் சபரீசன், ‘ரெய்டுக்கு முன்பே நான் துரைமுருகனுக்கு போன் போட்டு அங்கிள் உங்க தொகுதியைக் குறி வைச்சு ரெய்டு நடத்தப் போற மாதிரி தகவல் வருது. கொஞ்சம் பாத்துக்கங்க அங்கிள்னு எச்சரிச்சேன். ஆனா அவர் கண்டுக்கவே இல்ல’ என்று ஸ்டாலினிடம் சொன்ன தகவலும் துரைமுருகனுக்குத் தெரிந்தது.
மேலும் ரெய்டு நடந்த பிறகு அது குறித்து துரைமுருகன் செய்தியாளர்களிடம், தன் வீட்டு வாசலில் நின்று கொண்டு டேக் இட் ஈஸி யாக பேசிய விஷயங்களும் ஸ்டாலினை கோபப்படுத்தியதாம். ரெய்டு பற்றி மீடியாக்களிடம் எதுவும் பேச வேண்டாம் என்று துரைமுருகனிடம் சொல்லச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இதையடுத்து வாக்குப்பதிவு தினத்தன்று ஸ்டாலினின் உதவியாளர் தினேஷுக்கு போன் போட்ட துரைமுருகன், ‘நான் இப்போ ஓட்டு போடப் போறேன். அப்போ என் முகத்துக்கிட்ட மைக்கை கொண்டுவந்து நீட்டுவாங்க. அப்ப நான் என்ன சொல்லணும்?’ என்று நக்கலாகக் கேட்டிருக்கிறார். சில நிமிடங்கள் கழித்து துரைமுருகன் லயனுக்கு சென்று, ‘எல்லா இடத்திலும் ஜெயிப்போம்னு மட்டும் சொல்லச் சொன்னாங்க’ என்று அதற்கு பதிலும் சொல்லியிருக்கிறார் தினேஷ்.
இதுபோன்ற விஷயங்கள் துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் பெரியதொரு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. இது மட்டுமல்ல தேர்தல் பிரச்சாரங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ’திமுக ஆட்சியில் இல்லாதபோதே கோடி கோடியாய் வெச்சிருக்காங்க. அவங்க ஆட்சிக்கு வந்தா என்னாகும்னு யோசிச்சுப் பாருங்க’ என்று சொன்னதோடு கோடிகோடியாய் தங்கமும் கைப்பற்றப்பட்டிருப்பதாகக் கூறினார். இதை துரைமுருகன் கடுமையாக மறுத்து அறிக்கை விடுத்தார். மேலும் கட்சியின் பொருளாளர் பற்றி ஒரு முதல்வரே பேசியிருக்கும் நிலையில் திமுக தலைமை அதுபற்றி கடுமையான ரியாக்ஷன் காட்டாமல் இருந்ததும் துரைமுருகனுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அறிவாலயம் சென்றார் துரைமுருகன். அப்போது அவரிடம் பேசிய சில நிர்வாகிகள், ‘என்னண்ணே... டெய்லி உங்க வீட்ல கூட்டமா இருக்குதாம். நீங்க ஏதோ தனியா ஆலோசனை நடத்தறதா தலைவர்கிட்ட சொல்லியிருக்காங்க’ என்று கிசுகிசுத்துள்ளனர். ’ரெய்டு நடந்து தேர்தல் நின்னு போச்சேன்னு துக்கம் கேட்குற மாதிரி வந்து கேட்டுட்டு போறாங்கய்யா... இதுக்கு பேரு ஆலோசனையா?’ என்று உடனடியாக பதில் கொடுத்திருக்கிறார் துரைமுருகன். மேலும் இதுபற்றி உடனடியாக தனது நெருக்கமான நண்பர்களிடம் வருத்தப்பட்ட துரைமுருகன், கோட்டூர் புரத்திலுள்ள தனது வீட்டுக்கே சில நாட்கள் போகாமல் ஜெகத்ரட்சகனின் நட்சத்திர ஹோட்டலிலேயே தங்கியிருக்கிறார். அதன் பின் வேலூர் கிளம்பிப் போய்விட்டார்.
’துரைமுருகனிடம் இருக்கும் பொருளாளர் பதவியை பறித்து அதை எ.வ.வேலுவிடம் கொடுக்க நினைக்கிறார் தலைவர். ஆனால் இதுபற்றி அவரால் நேரடியாக துரைமுருகனிடம் கேட்கமுடியவில்லை. திமுகவில் ஒரு பெரும் சமூகத்தின் பிரதிநிதியாகவும், சீனியராகவும் துரைமுருகன் இருக்கும் நிலையில் அதிரடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதனால்தான் இப்படியெல்லாம் துரைமுருகனுக்கு அழுத்தங்கள் கொடுத்து வருகிறார்கள்’ என்கிறார்கள் துரைமுருகனின் ஆதரவாளர்கள். அதேநேரம் ஸ்டாலின் வட்டாரத்திலோ, ‘தலைவர் தேர்தல் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். தேர்தலில் பெருவெற்றிபெற்றுவிட்டால் கட்சியில் பல சீர்திருத்தங்களை செய்ய முனைப்பாக இருக்கிறார். அதில் ஒன்று துரைமுருகனிடம் இருந்து பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு வேறு ஒருவருக்கு வழங்கப்படும்’ என்கிறார்கள் உறுதியாக. சென்னையில் இருந்து வேலூர் புறப்படும் முன்னர் தனது நண்பர்களிடம் பேசிய துரைமுருகனும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ‘எலக்ஷன்ல ஜெயிச்சுட்டா என்னை எவனும் மதிக்கமாட்டான்’ என்று சொல்லியிருக்கிறார் துரைமுருகன். ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்குமான இந்த பனிப்போர் திமுகவின் பொருளாளர் பதவி மாற்றத்தில்தான் முடியும் என்கிறார்கள் அறிவாலய பட்சிகள்” என்ற

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக